முதலீடு குறித்த தகவலை வெளியிட வேண்டும்: மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ‘செபி’ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

நிறுவனங்களின் கடன் பத்திரங் களில் பரஸ்பர நிதி (மியூச்சுவல் பண்ட்) நிறுவனங்கள் முதலீடு செய்வது வழக்கம். ஆனால் சமீபத்தில் அம்டெக் ஆட்டோ நிறுவனத்தின் பத்திரங்கள் சர்ச்சைக்கு உள்ளாகி இருந்ததால் அதில் முதலீடு செய்திருந்த ஜேபி மார்கன் மியூச்சுவல் பண்டில் உள்ள முதலீட்டினை பெரும்பாலான முதலீட்டாளர்கள் வெளியே எடுத்தனர்.

அதனால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தங்களது முதலீடு குறித்த தகவலை வெளியிட வேண்டும் என்று செபி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கமும் இன்று விவாதிக்க உள்ளது. இன்று நடைபெறும் இயக்குநர் குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும். நிறுவனங்களின் கடன் பத்திரங் களில் முதலீடு செய்வது குறித்து பொதுவான விதிமுறைகளை வகுக்கப்பட வேண்டும் என்று சில மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கருதுகின்றன.

ஆனால் இது குறித்து கருத்தொற்றுமை ஏற்படவில்லை. நிறுவனங்களின் கடன் பத்திரங் களில் முதலீடு செய்வது என்பது தனிப்பட்ட நிறுவனங்களின் முடிவு, அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை அவர்களாகவே சரி செய்துகொள்ள வேண்டும். இதனை மியூச்சுவல் பண்ட் துறையின் பிரச்சினையாக மாற்றகூடாது என்று கருதுவதாக தெரிகிறது.

அம்டெக் ஆட்டோ கார்பரேட் பத்திரங்களை ஜேபி மார்கன் மட்டுமல்லாமல், இன்னும் சில மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கூட வாங்கி இருப்பதாக தெரிகிறது.

பட்டியலிடப்பட்ட நிறுவ னங்கள் தங்களுக்கான தரமதிப் பீட்டை வெளியிட வேண்டும் என்று செபி அறிவுறுத்தி இருக்கிறது. அப்படி இருந்தும் சில நிறுவனங்கள் தங்களது தர மதிப்பீட்டை குறைத்தது குறித்து தகவல்களை வெளியிடவில்லை.

நிறுவனங்களின் மதிப்பீடு குறித்து ரேட்டிங் ஏஜென்சிகள் குறியீடு வழங்குகின்றன. இதனை வைத்து மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் அந்த பத்திரங்களில் முதலீடு செய்கின்றன.

கார்ப்பரேட் பத்திரங்களில் முதலீடு செய்வதில் ரேட்டிங் நிறுவனங்களின் தர மதிப் பீட்டின் அடிப்படையில் மட்டும் முடிவெடுக்கக் கூடாது. அதற் கென சில விதிமுறைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்கம் கருதுகிறது.

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் எந்தெந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கின்றன, அதன் தர மதிப்பீடு எப்போது குறைக் கப்பட்டது, கடன் பத்திரத்தில் முதலீடு செய்த திட்டம் கையாளும் தொகை எவ்வளவு, தரமதிப்பீடு செய்த பிறகு எவ்வளவு தொகை குறைந்திருக்கிறது என்பது உள் ளிட்ட தகவல்களையும் செபி கேட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்