பிரதமரின் ஏழைகள் நலன் நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.68,820 கோடி நிதியுதவி

By செய்திப்பிரிவு

பிரதமரின் ஏழைகள் நலன் நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.68,820 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான பிரதமரின் ஏழைகள் நலன் நிதியுதவி திட்டத்தின் (PMGKP) ஒரு பகுதியாக, இலவச உணவு தானியங்கள் மற்றும் பெண்கள், ஏழை முதியவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிதியுதவி திட்டத்தை விரைவாக அமல்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் கண்காணித்து வருகின்றன. பிரதமரின் ஏழைகள் நலன் நிதியுதவி திட்டத்தின் கீழ் 42 கோடி ஏழை மக்கள், ரூ.68,820 கோடி நிதியுதவி பெற்றுள்ளனர்.

* பிரதமரின்-கிசான் திட்டத்தில் 8.94 கோடி பயனாளிகளுக்கு முதல் தவணை செலுத்த ரூ.17,891 கோடி ஒதுக்கப்பட்டது.

* ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் 20.65 கோடி பெண்களுக்கு முதல் தவணையாக ரூ.10,325 கோடி செலுத்தப்பட்டது. 20.63 கோடி பெண்களுக்கு 2வது தவணையாக ரூ.10,315 கோடி செலுத்தப்பட்டது. ரூ.20.62 கோடி பெண்களுக்கு 3வது தவணையாக ரூ.10,312 கோடி செலுத்தப்பட்டது.

* 2.81 கோடி முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 2 தவணைகளாக ரூ.2,814.5 கோடி செலுத்தப்பட்டது.

* 1.82 கோடி கட்டுமான தொழிலாளர்கள் ரூ.4,987.18 கோடி நிதியதவி பெற்றனர்.

* மேலும், பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான பயனாளிகளுக்கு பல லட்சம் மெட்ரிக் டன்

உணவு தானியங்கள் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை வழங்கப்பட்டன.

* கூடுதலாக பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான பயனாளிகளுக்கு பல லட்சம் மெட்ரிக் டன் பருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் 5 மாதங்களுக்கு நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

* தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, 2 மாதங்களுக்கு உணவு தானியங்கள் மற்றும் பருப்புகள் இலவசமாக வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது.

* பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மொத்தம் 8.52 கோடி சிலிண்டர்கள் வழங்கப்பட்டன.

* 36.05 லட்சம் பணியாளர்கள் பி.எப் கணக்கிலிருந்து ரூ.9,543 கோடி எடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

34 mins ago

ஜோதிடம்

44 mins ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்