கொச்சி மெட்ரோ; முதல்கட்டம் முழுமையாக முடிவடைந்தது; தாய்க்கூடம்- பேட்டா தடத்தில் போக்குவரத்து தொடக்கம்

By செய்திப்பிரிவு

கொச்சி மெட்ரோவின் தாய்க்கூடம் - பேட்டா தடத்தில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதால், கேரள மெட்ரோவின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.

கொச்சி மெட்ரோவின் முதல் கட்டம் ரூ 6,218 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கொச்சி மெட்ரோவின் இரண்டாவது கட்டத்துக்கான முன்மொழிதல் மத்திய அரசால் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கொச்சி மெட்ரோவின் தாய்க்குடம் - பேட்டா தடத்தில் சேவைகளைத் தொடங்கி வைத்தனர்.

ஜெர்மன் வங்கியான கே எப் டபுள்யூவின் நிதி உதவியோடு கொச்சி நீர் மெட்ரோ திட்டத்தை கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் செயல்படுத்தவிருக்கிறது. இம்மாதிரியான திட்டம் அமல்படுத்தப்படுவது நாட்டிலேயே இது தான் முதல் முறையாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்