எலெக்ட்ரானிக் பணப் பரிவர்த்தனைகளுக்கு  பிடித்தகட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும்:  வங்கிகளுக்கு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு


எலெட்ரானிக்ஸ் பணப் பரிவர்த்தனைகளுக்கு கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் வங்கிகள் பிடித்த கட்டணங்களை திரும்ப அளிக்குமாறு வருமான வரித்துறை வங்கிகளை அறிவுறுத்தி உள்ளது.

டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் பொருட்டு நிதிச்சட்டம் 2019-ல் புதிய பிரிவு (269 எஸ்.யு) இணைக்கப்பட்டது. பின்னர் ரூபே கார்டு மற்றும் பீம் செயலி போன்றவற்றின் மூலமான பரிமாற்றங்களும் எலக்ட்ரானிக் முறையாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் சில வங்கிகள் எலெட்ரானிக் முறையிலான பண பரிவர்த்தனைகள் செய்யும் ஒரு மாதத்திற்கு 20 முறைக்கு மேல் மேற்கொண்டால் அதற்கு கட்டணத்தை வசூலித்து வருகின்றன. ஆனால் இது வருமான வரிச் சட்டம் 269SU கீழ் விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் வங்கிகள் பிடித்த மேற்படி கட்டணங்களை திரும்ப அளிக்குமாறு வருமான வரித்துறை வங்கிகளை அறிவுறுத்தி உள்ளது.


இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,‘‘வருமான வரிச்சட்டம் 1961-ன் 269 எஸ்.யு. பிரிவின் கிழ் வரையறுக்கப்பட்டு உள்ள எலக்ட்ரானிக் முறை பரிமாற்றங்களுக்கு கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் பிடிக்கப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்ப செலுத்துமாறு வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன.

மேலும் எதிர்காலத்திலும் இத்தகைய பரிமாற்றங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன’’ என
கூறப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்