கரீஃப் பருவப் பயிர் சாகுபடி: நாடுமுழுவதும் 13.92% அதிகம்

By செய்திப்பிரிவு

நாடுமுழுவதும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 13.92 சதவிகித அதிக நிலப்பரப்பில் கரீஃப் பருவப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கள அளவில் வேளாண் செயல்பாடுகளுக்கும், விவசாயிகளுக்கும் உதவும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசின் வேளாண்மைக் கூட்டுறவு விவசாயிகள் நலன் ஆகியவற்றுக்கான துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கரீப் பருவ பயிர்களில் விதைப்புப் பரப்பளவு திருப்திகரமான முன்னேற்றத்தை அளித்துள்ளது. விவரங்கள் பின்வருமாறு:

கரீஃப் பருவ பயிர்களுக்கான விதைப்புப் பரப்பளவு:31.7.2020இன் படி கரீஃப் பருவப் பயிர்கள் மொத்தம் 882.18 லட்சம் ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் மொத்தம் 774.38லட்சம் ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்பட்டது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டில் இந்த ஆண்டு 13.92 சதவிகிதம் அதிக நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது.

விதைக்கப்பட்டுள்ள பயிர்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:

அரிசி: இந்த ஆண்டு சுமார் 266.60லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விதைக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் விதைக்கப்பட்ட நிலப்பரப்பின் அளவு 223.96 லட்சம் ஹெக்டேர் பருப்பு வகைகள்: சுமார் 11 1.91 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில்பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் 93.84 லட்சம் ஹெக்டேர்நிலப்பரப்பில் பயிரிடப்பட்டது.

மோட்டா தானியங்கள் சுமார் 148.34 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் 139.26 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டது.

எண்ணெய் வித்துக்கள்: சுமார் 175. 34 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது.சென்ற ஆண்டு இதே காலத்தில் 150 .12 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டது.

கரும்பு: சுமார் 51.78 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது.சென்ற ஆண்டு இதே காலத்தில் 51.20 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டது.

சணல் பயிர் மற்றும் மேஸ்தா:சுமார் 6.95 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் 7.05 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டது.

பருத்தி: சுமார் 121.25 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் 108.95 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டது.

ஒட்டுமொத்தமாக இன்றைய தேதி நிலவரப்படி கரீஃப் பருவப் பயிர் விதைப்பில் கோவிட்- 19 காரணமாக பாதிப்பு எதுவும் இல்லை.

2. 30.7.2020 அன்றைய நிலவரப்படி நாட்டில் பெய்த மொத்த மழையளவு 447.1 மில்லிமீட்டர். சாதாரணமாக பொதுவான மழையளவு 443.3 மில்லி மீட்டர். அதாவது 1.6.2020 முதல் 3.7.2020 வரையிலான காலத்தில் ஒரு சதவிகிதம் வேறுபட்டுள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள 123 நீர்த்தேக்கங்களில் மொத்த நீர் இருப்பு, சென்ற ஆண்டு இதே காலத்தில் இருந்த அளவைவிட 141 சதவிகிதம் அதிகமாக உள்ளது என்று மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

26 mins ago

சினிமா

31 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்