மீண்டும் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

வெட்டுக்கிளிகள் கூட்டம் மீண்டும் சில இடங்களில் படையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில் பல மாநிலங்களில் பூச்சி மருந்து தெளிப்பு நடவடிக்கைகளை மத்திய விவசாய அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் அறிவுறுத்தலின்படி வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு வட்டார அலுவலகங்கள் (LCOs). மூலமாக 11 ஏப்ரல் 2020 முதல் 9 ஜுலை 2020 வரை 1,51,269 ஹெக்டேர்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஹரியாணா மற்றும் பிஹார் மாநிலங்களின் மாநில அரசுகள் 9 ஜுலை 2020 வரை 1,32,660 ஹெக்டேர் நிலப்பரப்பில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.

9-10 ஜூலை இரவு நேரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர், ஜெய்சல்மர், ஜோத்பூர், பிக்கானீர், சூரூ, ஜுன்ஜுனு, சிக்கர் மற்றும் கௌரலி ஆகிய 8 மாவட்டங்களின் 16 இடங்கள்; குஜராத்தின் பூஜ் மாவட்டத்தின் 2 இடங்கள் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் ஔரய்யா, மற்றும் இட்டாவா மாவட்டங்களில் தலா 1 இடங்கள் ஆகியவற்றில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு வட்டார அலுவலகங்கள் மூலம் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனோடு ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் 1 இடம், உத்திரப்பிரதேசத்தின் ஔரய்யா, மற்றும் இட்டாவா மாவட்டங்களில் தலா 1 இடம் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட மாநில வேளாண் துறைகள் 9-10 ஜூலை இரவு நேரத்தில் சிறு சிறு வெட்டுக்கிளிக் குழுக்கள் மற்றும் சிதறிக்கிடக்கும் வெட்டுக்கிளிக் கூட்டங்களுக்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது தெளிப்பான் வாகனங்களுடன் 60 கட்டுப்பாட்டுக் குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு

நடவடிக்கைகளில் 200க்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக இப்போது 20 தெளிப்பான் கருவிகள் பெறப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் திறனை வலுப்படுத்துவதற்காக 55 கூடுதல் வாகனங்கள் வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 33 வாகனங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு விட்டன. மீதி உள்ள 22 வாகனங்கள் தற்போது பெறப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்