கரோனா ஊரடங்கிற்கு முந்தைய ஜிஎஸ்டி ரிட்டன்; தாமதக் கட்டணமின்றி தாக்கல் செய்யலாம்: நிர்மலா சீதாராமன்

By செய்திப்பிரிவு

கரோனா காலத்திற்கு முந்தைய காலத்தில் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி ரிட்டன்களை தாமதக் கட்டணமின்றி தாக்கல் செய்யலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சர், மத்திய அரசு உயரதிகாரிகள் அனைவரும் காணொலி மூலம் பங்கேற்றனர்.

கரோனா வைரஸ் லாக்டவுனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, மாநிலங்களுக்கு ஏற்பட்ட வரி வருவாய் இழப்பு ஆகியவை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் குழுக்கூட்டத்தில் பேசப்பட்டது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் ‘‘கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே 2017-ம் ஆண்டு ஜூலை முதல் 2020 ஜனவரி வரை காலத்திற்கான ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன. இந்த காலத்திற்கான ஜிஎஸ்டி தாக்கலை தாமதக் கட்டணமின்றி செய்யலாம். அதற்கு முந்தைய காலத்திற்குரிய ஜிஎஸ்டி தாமதக் கட்டணம் 18 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

இந்தியா

26 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்