கரோனா வைரஸை தடுக்க 100 கோடி தடுப்பு மருந்து- லண்டன் ஜிஎஸ்கே நிறுவனம் திட்டம்

By செய்திப்பிரிவு

உலகின் மிகப் பெரிய தடுப்பூசி மருந்து தயாரிக்கும் ஜிஎஸ்கே நிறுவனம் கரோனா வைரஸ் (கோவிட்-19) தடுப்பு மருந்துகளை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. சனோபி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து தடுப்பூசி மருந்துகளைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. 2021-ம் ஆண்டு ஜூன் வாக்கில் 100 கோடி தடுப்பு ஊசிகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

அட்ஜுவன்ட் பிளாட்பார்ம் இந்நிறுவனத்தின் மிகச் சிறந்த நுட்பமாகும். சனோபி நிறுவனம் புரதம் சார்ந்த எதிர்ப்பு மருந்து தயாரிப்பில் பிரபலமான நிறுவனமாகும். இந்த 2 நிறுவனங்களும் ஒன்றிணைந்து அடுத்த 15 முதல் 18 மாதங்களுக்கு 100 கோடி தடுப்பூசி மருந்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளன.

அட்ஜூவன்ட் தொழில் நுட்பம் மூலம் தடுப்பூசி மருந்துகளைஅதிகளவில் தயாரிக்க முடியும். இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பு மருந்து கிடைக்கும். சர்வதேச அளவில் 9 ஆலைகளில் 100 கோடி தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க முடியும் என்று இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி ஒரு நாளைக்கு 20 லட்சம் தடுப்பூசிகளை தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளன. கடந்த10 ஆண்டுகளில் 400 கோடி பவுண்டுகளை இந்நிறுவனம் ஆராய்ச்சிக்கு முதலீடு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

உலகம்

11 hours ago

ஆன்மிகம்

11 hours ago

மேலும்