ஹோண்டா ஸ்போர்ட்ஸ் பைக் டெல்லியில் அறிமுகம்

By பிடிஐ

மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் டெல்லியில் நேற்று 650 சிசி திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. சிபிஆர் 650 எப் என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த மோட்டார் சைக்கிள் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தாகும். இதன் டெல்லி விற்பனை யக விலை ரூ. 7.3 லட்சமாகும்.

மோட்டார், ஸ்கூட்டர் விற்பனைச் சந்தையில் கணிசமான இடத்தைப் பிடிக்கும் முயற்சியாக நடப்பு ஆண்டில் 15 மாடல்களில் புதிய ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருந்தது. இதுவரை 10 மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது 11-வது மாடல் மோட்டார் சைக்கிள் என்று நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான கெய்தா முராமட்ஸு தெரிவித்தார்.

இந்தியாவில் இந்த மோட்டார் சைக்கிள் தயாரிப்பதற்காக தங்கள் நிறுவன குழு கடினமாக உழைத்தது. 16 வால்வு, 4 சிலிண்டர் மோட்டார் சைக்கிளை வடிவமைப்பதில் மிகுந்த சிரமம் இருந்தது என்று அவர் கூறினார்.

இந்த மோட்டார் சைக்கிள் மோனோ சஸ்பென்ஷன், 6 ஸ்பீட் கியர், இன்ஜின் கூலிங் வசதி ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டது. ஹோண்டா நிறுவனம் இத்தாலிய மோட்டார் சைக்கிள் ஸ்போர்ட்ஸ் ஆடை தயாரிப்பு நிறுவனமான ஜிஏஎஸ்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஜிஏஎஸ்- ஹோண்டா ஆடை, கிளவுஸ், தொப்பிகள் அறிமுகப்படுத்தப் பட்டன.

ஆண்டுக்கு 50 லட்சம் வாகனங் களை விற்பனை செய்யும் இலக்கின் ஒரு அங்கமாக புதிய தயாரிப்புகளை அதிக எண்ணிக் கையில் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஜூலை மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 3,89,624 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. நடப்பு நிதிஆண்டில் இதுவரை இந் நிறுவனம் 14 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனையானதைவிட இது 5 சதவீதம் அதிகமாகும்.

முதல் கட்டமாக மனேசர் ஆலையில் அசெம்பிள் செய்யப் படும். இதில் உள்ளூரில் தயாரான பாகங்களின் அளவு 5 சதவீதம்தான். பிற அனைத்தும் ஜப்பான், தாய்லாந்து ஆலையிலிருந்து வரவழைக்கப்பட்டு இங்கு அசெம்பிள் செய்யப்படுவதாக அவர் கூறினார்.

இதுவரை இந்த மாடல் குறித்து 100 பேர் விவரம் கேட்டுள் ளதாக அவர் கூறினார். பேட்டரி மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் அறிமுகம் செய்யும் திட்டம் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இப்போதைக்கு அதுபோன்ற திட்ட யோசனை இல்லை என்று அவர் உறுதிபடக் கூறினார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

29 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்