கரோனா; கச்சா எண்ணெய் வரலாறு காணாத சரிவு ஏன்? 

By செய்திப்பிரிவு

கரோனாவின் கொடூர தாக்கத்தால் உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளன. இதனால் மொத்தமாக பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை சரிவு 50% ஆக உள்ளது.

இதுவரையில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விற்பனைகள் சரிவு கண்டுள்ளன. 2019 ஏப்ரலில் இந்தியா 2.4 மில்லியன் டன்கள் பெட்ரோ மற்றும் 7.3 மில்லியன் டன்கள் டீசல் நுகர்வு செய்துள்ளது, இதே காலத்தில் 645000 டன்கள் ஏடிஎஃப் பயன்படுத்தியுள்ளது.

மார்ச் 2020-ல் பெட்ரோலியப் பொருட்கள் நுகர்வு 17.79% சரிவு கண்டு 16.8 மில்லியன் டன்களாகக் குறைந்தது. டீசல் இதே மாதத்தில் 24.23% சரிவு கண்டு 5.65 மில்லியன் டன்களாகக் குறைந்தது.

இந்தநிலையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை கண்டுள்ளது. நேற்று அமெரிக்க பங்குச்சந்தை ( திங்கள்) தொடங்கியது முதலே கச்சா எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சி அடைந்தது.

அமெரிக்காவின் டபிள்யு.டி.ஐ., எனப்படும் வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு (-39.14 டாலர்) என 0 டாலருக்கும் கீழே குறைந்தது. அதே போன்று (Brent) பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்து வந்தன.


இதன் மூலம் அமெரிக்காவின் எண்ணெய் வர்த்தக வரலாற்றில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலருக்கும் கீழ் சென்றது இது தான் முதன்முறையாகும்.

இதுகுறித்து கச்சா எண்ணெய் வர்த்தகத்துறை நிபுணர் கே.கே மிட்டல் கூறியதாவது:
அமெரிக்காவின் டபிள்யு.டி.ஐ., எனப்படும் வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு (-39.14 டாலர்) என 0 டாலருக்கும் கீழே குறைந்தது.

இதற்கு அர்த்தம் பூஜ்யம் விலையை விடவும் கீழே சென்றதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. மாறாக எதிர்காலத்தை கணிக்கிட்டு ஒப்பந்தம் செய்யும்போது சரக்கை எடுத்துச் செல்ல முடியாத நிலை இருப்பதால் கச்சா எண்ணெய் விலை வாங்கி விற்க முடியாத சூழல் இருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

20 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்