கரோனா; மோட்டர் வாகன இன்சூரன்ஸ்: புதுப்பிக்க கால அவகாசம் அறிவிப்பு 

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு நேரத்தில் மோட்டார் வாகன மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காப்பீட்டுப் பாலிசிதாரர்கள் தங்களுடைய பாலிசியைப் புதுப்பிப்பதற்கான அவகாசத்தை மே 15- ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு நேரத்தில், மருத்துவும் மற்றும் மோட்டார் வாகன (மூன்றாம் தரப்பு) பாலிசிதாரர்கள் தங்கள் காப்பீடுகளைப் புதுப்பிப்பதில் சிரமத்தை எதிர்க்கொள்வதால், அவர்கள் தங்கள் பாலிசியை புதுப்பிப்பதற்கு மே 15-ம் தேதி வரை அவகாசம் அளிக்கும் அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் தடையின்றி கப்பீட்டுதாரர்கள் தங்கள் பாலிசியைப் புதுப்பித்துக் கொள்ள முடிவதுடன், இந்த கருணைக் காலத்தில் தங்களின் உரிமைகோரல்களையும் எளிதில் இடரின்றிப் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பாணையில், 2020 மார்ச் 25-ம் தேதியில் இருந்து 2020 மே 3-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், சுகாதாரம் மற்றும் மோட்டார் வாகன மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் பாலிசிகளை புதுப்பிக்க வேண்டிய பாலிசிதாரர்ரகள், இந்த கரோனா வைரஸ் நோய் பரவலால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் உரிய நேரத்தில் தங்கள் பாலிசியைப் புதுப்பிக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் ஆகியோர் 2020 மே 15ஆம் தேதிக்குள் தங்கள் பாலிசியைப் புதுப்பித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மோட்டார் வாகன மூன்றாம் தரப்புக் காப்பீடு முடிவடையும் தேதியில் இருந்தே அவர்கள் தங்கள் பாலிசியை புதுப்பித்துக் கொள்ள முடியும். மேலும், இந்த கருணைக் காலத்தில் உரிமைகோரல்கள் இருந்தாலும், அதையும் அவர்கள் பெற முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

வலைஞர் பக்கம்

53 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்