யெஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

யெஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்துள்ளார்.

யெஸ் வங்கி தற்போது கடும்நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அதன் நிதி மூலதனத்தை ஆர்பிஐ நிர்ணயித்த வரம்புக்குள் கொண்டுவர கடும் முயற்சியில் இறங்கி இருந்தது. மூலதனத்தை உயர்த்த ரூ.14,000 கோடி நிதி திரட்ட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கியின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவில் முதலீடு வராத நிலையில் அந்த இலக்கை ரூ.10,000 கோடியாக குறைத்தது.

ஐஎல் அண்ட் எஃப்எஸ், ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் ரஸ்ஸல் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி ரூ.10,206 கோடிக்குமேல் கடன் அளித்துள்ளது. இவற்றில் சில நிறுவனங்கள் திவால் நிலையில் உள்ளன. இதனால் யெஸ் வங்கியின் வாராக் கடன் கடுமையாக உயர்ந்தது.

ற்போது எஸ்பிஐ மற்றும் எல்ஐசி கூட்டமைப்பு யெஸ்வங்கியின் பங்குகளை வாங்க முன்வந்துள்ளது. தற்போது யெஸ் வங்கியின் கடன் சுமை ரூ.14,700 கோடியாக உள்ளது. இது வங்கியின் சொத்து மதிப்பில் 54.5% ஆகும். மேலும் யெஸ் வங்கியை காக்கும் பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், நிதியமைச்சகமும் எடுத்து வருகின்றன.

அதன்படி, வாடிக்கையாளர்கள் ரூ.50,000 வரையில் வங்கியிலிருந்து அதிகபட்சமாக பணம் எடுக்கலாம். மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதிவரை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் எஸ் வங்கி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து யெஸ் வங்கி வாடிக்கையாளர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
யெஸ் வங்கியில் ஏற்பட்ட பாதிப்பு திடீரென நிகழ்ந்தது அல்ல. கடந்த 2017-ம் ஆண்டு முதலே அந்த வங்கியை கூர்ந்து கவனித்து வருகிறோம். ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலை தொடர்ந்து அதன் நிர்வாக அதிகாரி 2018-ம் ஆண்டு மாற்றப்பட்டார்.

அந்த வங்கியின் நிதிநிலையை சீர் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 2019-ம் ஆண்டு முதல் செபியும் அந்த வங்கியை கண்காணித்து வருகிறது. யெஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.’’ எனக் கூறினார்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்