கடந்த 10 ஆண்டுகளில் ரூ.4.7 லட்சம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி

By செய்திப்பிரிவு

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூ.4.7 லட்சம் கோடி அளவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 2017-ம் ஆண்டுக்குப் பிறகே ரூ.2 லட்சம் கோடி அளவில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2015-ம் ஆண்டு ஆந்திர அரசு ரூ.24,000 கோடியும், தெலங்கானா அரசு ரூ.17,000 கோடியும் விவசாயக் கடனில் தள்ளுபடி செய்தன. 2017-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ரூ.5,280 கோடியை தள்ளுபடி செய்தது. 2018-ல் மகாராஸ்டிரா ரூ.34,020 கோடி, உத்தரப் பிரதேசம் ரூ.36,360 கோடி, பஞ்சாப் ரூ.10,000, கர்நாடகா ரூ.18,000 கோடி அளவில் தள்ளுபடி செய்தன. அதேபோல் 2019-ம் ஆண்டில் ராஜஸ்தான் ரூ.18,000 கோடி, மத்தியப் பிரதேசம் ரூ.36,500 கோடி, சத்தீஸ்கர் ரூ.6,100 கோடி, மகாராஸ்டிரா ரூ.51,000 கோடி வரையிலும் தள்ளுபடி செய்தன.

கடன் அதிகரிப்பு

2015-16 நிதியாண்டில் ஒட்டு மொத்த வாராக் கடன் ரூ.5.6 லட்சம் கோடியாக இருந்ததது. அதில் விவாசயம் சார்ந்த வாராக கடன் ரூ.48,800 கோடியாக இருந் தது. இந்நிலையில் 2018-19 நிதி யாண்டில் ஒட்டுமொத்த வாராக் கடனில் (ரூ.8.8 லட்சம் கோடி) விவசாயத் துறை சார்ந்த வாரக் கடன் 12.4 சதவீதமாக அதிகரித்து ரூ.1.1 லட்சம் கோடியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்