மூன்று நாட்கள் சரிவைக் கண்ட நிலையில் மும்பை பங்குச் சந்தையில் 400 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

நேற்றைய வர்த்தக முடிவில் பங்குச் சந்தைப் புள்ளிகள் 1 சதவீதம் அளவில் ஏற்றம் கண்டன. மும்பை பங்குச் சந்தையில் 411 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டென் 41,575.14-ஐ தொட்டது. இது 1 சதவீத உயர்வு ஆகும். அதேபோல் தேசிய பங்குச் சந்தையும் ஏற்றம் கண்டது. வர்த்தக முடிவில் தேசிய பங்குச் சந்தையில் 119 புள்ளிகள் உயர்ந்தன. இந்நிலையில் அதன் குறியீட்டென் 12,245.80-ஐ தொட்டது. இதுவும் 1 சதவீத உயர்வு ஆகும்.

கடந்த மூன்று நாட்களாக பங்குச் சந்தையில் வீழ்ச்சி காணப்பட்டது. இந்நிலையில் ஆண்டு இறுதி நெருங்கியுள்ள நிலையில் நேற்று ஏற்றம் கண்டது.

அலாகாபாத் வங்கியின் பங்கு மதிப்பு 8.45 சதவீதம் உயர்ந்தது. ஆக்ஸிஸ் வங்கியின் பங்குகள் 3.33 % , எஸ்பிஐ 2.24%, ஐசிஐசிஐ வங்கி 1.93% அளவிலும் ஏற்றம் கண்டன.

பவர்கிரிட், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், எல் அண்ட் டி, பஜாஜ் பைனான்ஸ், மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் எழுச்சி கண்டன. டைட்டன், கோடக் வங்கி ஆகியவற்றின் பங்குகள் சரிந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

7 mins ago

இந்தியா

36 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்