கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம்

By செய்திப்பிரிவு

கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டிருக்கிறார். 43 வயதாகும் சுந்தர் பிச்சை சென்னை பத்மா சேஷாத்திரி பால பவனில் பள்ளிக்கல்வியும், கரக்பூர் ஐஐடி-யில் பி.டெக்-கும் படித்தவர். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பட்டமும் வார்டன் நிர்வாக கல்லூரியில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.

2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் ஐபிஒ வெளியிட்டது. அதற்கு முன்பு அந்த நிறுவனத்தில் சேர்ந்தார். ஆரம்பத்தில் கூகுள் குரோம் உருவாக்கும் குழுவில் இருந்தார். 2008-ம் ஆண்டு குரோம் வெளியாகி பெரு வெற்றி பெற்றது. அதன் பிறகு மொபைல் இயங்குதளமான ஆண்ட்ராய்டின் தலைவரானார்.

சுந்தர் பிச்சை நியமனத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெள்ளா உள்ளிட்ட பலர் அவருக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்திருக் கிறார்கள்.

புதிய நிறுவனம்

சுந்தர் பிச்சை நியமனத்தை தவிர கூகுள் நிறுவனத்தில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட் டிருக்கின்றன. புதிதாக ஆல்பபெட் இன்கார்ப்பரேஷன் (Alphabet Inc) என்னும் நிறுவனம் தொடங் கப்பட்டிருக்கிறது. தற்போது பங்குச்சந்தை கூகுள் என்னும் பெயர் பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. இனி, ஆல்பபெட் என்னும் பெயர் அந்த பங்குகள் வர்த்தகமாகும். அந்த பங்குகளுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் இந்த பங்குக்கும் உண்டு.

இனி ஆல்பபெட் நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவ னமாக கூகுள் செயல்படும். இந்த துணை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை செயல்படுவார். ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ் பொறுப்பேற்பார். இன்னொரு நிறுவனர் செர்கி பிரின் தலைவராகச் செயல்படுவார்.

நடப்பு ஆண்டின் இறுதிக்குள் இந்த மாற்றங்கள் முழுமையாக நடைபெறும் என்று அறிவிக் கபட்டுள்ளது. புதிய மாற்றத்தின்படி கூகுள் நிறுவனத்தில் தேடுபொறி, விளம்பரம், மேப்ஸ், யூ டியூப், மொபைல் இயங்குதளமான ஆண்ட்ராய்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் கூகுளின் கீழ் செயல்படும்.

தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் கூகுள், ஆராய்ச்சி நிறுவனமான காலிகோ (Calico) சமீபத்தில் கையகப்படுத்திய நெஸ்ட் நிறுவனம் (ஸ்மார்ட் தெர்மோஸ்டாட் தயாரிக்கும் நிறுவனம்), கூகுள் நிறுவனத்தின் பிராட்பேண்ட் நிறுவனமான பைபர், முதலீட்டு நிறுவனமான கூகுள் வென்ச்சர்ஸ், கூகுள் கேபிடல் தானியங்கி கார் உள்ளிட்ட புதுமை கண்டுபிடிப்புகளுக்காக உருவாக்கப்பட்ட கூகுள் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆல்பபெட் நிறுவனத்தின் துணை நிறுவனங் களாக செயல்படும்.

புதிய நிறுவனம் தொடங்கப் பட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்கள் (லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின்) தெரிவித்திருக்கிறார்கள். ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் தனியாக இயங்கும், அந்த நிறுவனங்கள் தங்களுக்கான பிராண்டை வளர்த்துக்கொள்ளும் என்று லாரி பேஜ் தெரிவித்தார்.

கூகுள் நிறுவனம் மாற்றி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்கு திங்கள் கிழமை வர்த்தகத்தில் 7 சதவீதம் உயர்ந்து 708 டாலர் அளவில் வர்த்தகமானது. கூகுள் நிறுவனம் 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் சுமார் 40,000 பணியாளர்கள் இருக்கிறார்கள்.

ஏன் பிரிக்கப்பட்டது?

ஆரம்பத்தில் தேடுபொறி நிறுவனமாகதான் கூகுள் தொடங்கப்பட்டது. அதன் பிறகு யூ டியூப், ஆண்ட்ராய்ட் உள்ளிட்ட சில நிறுவனங்களை கூகுள் வாங்கியது. கூகுள் நிறுவனமும் சில பொருள்களை உருவாக்கியது. சமீபத்தில் டிரைவர் இல்லாத கார், பலூன் இண்டர்நெட், கூகுள் கிளாஸ் உள்ளிட்ட பல விதமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தவிர பல ஆராய்ச்சி களையும் நிறுவனம் செய்து வருகிறது.

ஒரே நிறுவனத்தின் கீழ் இத்தனை விஷயங்களையும் செய்ய முடியாது என்பதால் புதிதாக தாய் நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதன் கீழ் பல நிறுவனங்களையும் அதற்கான பொறுப்பாளர்களையும் கூகுள் நிறுவனர்கள் உருவாக்கி இருக் கிறார்கள். ஆல்பபெட் நிறுவ னத்தின் கீழ் புதிய நிறுவனங்கள்/ பொருள்களை உருவாக்குவது நிறுவனர்களின் பணி.

சர்வதேச நிறுவனங்களில் இந்திய சி.இ.ஓ.கள்

சர்வதேச நிறுவனங்களில் இந்தியாவில் பிறந்தவர்கள் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்படுவது சமீபத்தில் அதிகரித்து வருகிறது. 40,000 கோடி டாலருக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் பலர் இந்தியர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். அந்த பட்டியலில் சுந்தர் பிச்சையும் இணைந்திருக்கிறார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா, பெப்சிகோ நிறுவனத்தின் இந்திரா நூயி, டீகோ நிறுவனத்தின் இவான் மெனசெஸ், ரிக்கெட் பென்கிஸர் நிறுவனத்தின் ராகேஷ் கபூர், மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் அஜய் பங்கா, டிபிஎஸ் குரூப் ஹோல்டிங் நிறுவனத்தின் பியூஷ் குப்தா, சான் டெஸ்க் நிறுவனத்தின் சஞ்சய் மெஹ்ரோத்ரா, குளோபல் பவுண்டரிஸ் நிறுவனத்தின் சஞ்சய் ஜா, காக்னிசென்ட் நிறுவனத்தின் பிரான்சிஸ்கோ டிசோசா மற்றும் அடோப் நிறுவனத்தின் சாந்தனு நாராயண் ஆகியோர் சர்வதேச நிறுவனங்களில் இருக்கும் இந்திய தலைவர்கள் ஆவார்கள்.

கடந்த காலங்களில் சிட்டி குரூப், வோடபோன், மோட்டரோலா, டாய்ஷ் வங்கி ஆகிய நிறுவனங்களில் தலைவர்களும் இந்தியர்களாக இருந்தார்கள். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெரிய நிறுவனமான சாப்ட் வங்கியின் அடுத்த தலைமைச் செயல் அதிகாரியாக நிகேஷ் அரோரா நியமிக்கப்பட இருக்கிறார். அவரும் இந்தியரே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

49 mins ago

ஜோதிடம்

1 hour ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்