10 வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் ஊழியர்கள் வேலை இழக்க மாட்டார்கள்: மாநிலங்களவையில் அமைச்சர் உறுதி

By செய்திப்பிரிவு

பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதால் ஊழியர்கள் வேலை இழக்கமாட்டார்கள் என்று மத்திய நிதித்துறை இணை அமைச் சர் அனுராக் தாகுர் உறுதிபட தெரிவித்தார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர், ஊழியர்களின் நலன் பாதுகாக்கப் படும் என்று உறுதி அளித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 10 பொதுத் துறை வங்கிகள் நான்கு பெரிய வங்கிகளாக ஒன்றிணைக்கப்படு வது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதன்மூலம் பெரிய வங்கிகளாக உருப்பெறுவ தோடு கடன் வழங்கும் அளவும் அதிகரிக்கும் வளர்ச்சியும் அடை யும் என அரசு தெரிவித்திருந்தது.

கொல்கத்தாவை தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் இரண்டு வங்கிகள் இணைக்கப்பட் டதன் மூலம் நாட்டின் கிழக்கு பிராந் தியத்தில் கடன் வழங்கும் அளவு மேம்பட்டுள்ளதாகவும், வங்கிச் சேவை மேம்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியோடு யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா (யுபிஐ) இணைக்கப்பட்டது. அதே போல இந்தியன் வங்கியோடு அலாகாபாத் வங்கி இணைக்கப் பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

வங்கிகள் இணைப்பு நடவடிக் கையால் வங்கிகள் கடன் வழங் கும் அளவு அதிகரித்துள்ளது அத் துடன் ஊழியர்கள் எவரும் வேலை இழக்கவில்லை. வங்கிகள் இணைப்பு நடவடிக்கையின்போது ஊழியர்களின் நலனும் கருத்தில் கொள்ளப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

வங்கிகள் இணைப்பு நடவடிக் கையை மேற்கொள்ளும் முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டோம். அதிலும் குறிப்பாக 1998-ல் வெளி யிட்ட நரசிம்மம் குழுவின் பரிந்துரை யும் 2008-ம் ஆண்டு வெளியான லீலாதர் குழுவின் பரிந்துரையும் வங்கிகள் இணைப்பு நடவடிக்கை யின்போது உறுதியாக பின்பற்றப் பட்டன என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

வங்கிகள் இணைப்பு நடவ டிக்கை எடுக்கும்போது அவற்றின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனித வளங் களை அதிக அளவில் சிறப்பாக பயன்படுத்துவது குறித்து ஆராயப் பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது என்று தாகுர் சுட்டிக் காட்டினார்.

வங்கிகள் இணைப்புக்கு சம் பந்தப்பட்ட வங்கிகளின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்த பிறகு அவற் றில் ஒருங்கிணைப்புக் குழு உரு வாக்கப்பட்டு, பணியாளர்களின் செயல்பாடுகள் அனைத்தும் ஒருங் கிணைக்கப்பட்டதாக அவர் குறிப் பிட்டார்.

நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் வங்கி சேவை முடங்கியதாக உறுப் பினர் எழுப்பிய குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர், அப்பகுதிகளில் கடன் வழங்கும் விகிதம் அதிகரித் துள்ளதோடு வங்கிச் சேவை மேம்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில் வங்கிகள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டியது அவசி யம். வங்கிகளின் செயல் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்ட அதேசமயம் வங்கிகளில் ரூ.2.35 லட்சம் கோடி அளவுக்கு மூலதனம் செய்யப்பட்டு வங்கி களின் நிதி ஆதாரம் மேம்படுத்தப் பட்டதாக அவர் கூறினார். நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் சேவை மேம் பட்டுள்ளதை உறுப்பினர்கள் கண் கூடாக உணர முடியும் என்றார்.

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வின் வர்த்தக அளவு ரூ.2,08,000 கோடியாகும். அதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கியின் வர்த்தக அளவு ரூ.11,82,224 கோடியாகும். இவை இரண்டும் ஒன்றிணைந்ததன் மூலம் கையாளும் வர்த்தக அளவு ரூ.17,94,526 கோடியாகும். தற் போது நாட்டிலேயே இரண்டாவது பெரிய வங்கியாக இது உருவெடுத் துள்ளது என்றார்.

வங்கிகள் அனைத்தும் ஒரே மாதிரியான கம்ப்யூட்டர் சாஃப்ட் வேரை பயன்படுத்துவதை உறுதிப் படுத்தியுள்ளோம். இதன் மூலம் வங்கிப் பணியாளர்கள் தகவல் தொழில்நுட்பத்தைக் கையாள் வதில் எவ்வித சிரமத்தையும் எதிர் கொள்ள வேண்டிய அவசியமேற் படாது என்று கூறினார்.

பங்கு விலக்கல் மூலம்...

ரூ.2,79,622 கோடி திரட்டல் கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட பங்கு விலக்கல் நடவடிக்கையால் ரூ.2,79,622 கோடி திரட்டப்பட்டுள் ளது என்றார். 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலை மையிலான அரசு பங்கு விலக்கல் மூலம் திரட்டிய தொகை ரூ.1,07,833 கோடி என்று அவர் குறிப்பிட்டார். ஆண்டுக்கு 21 பங்கு விலக்கல் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. ஆனால் காங்கிரஸ் அரசில் இது ஆண்டுக்கு நான்கு என்ற அள வில்தான் இருந்தது என்றும் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

58 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்