புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் மூன்று மாதங்களில் ரூ.577 கோடி அபராதம்

By செய்திப்பிரிவு

புதிதாக அமல்படுத்தப்பட்ட மோட் டார் வாகனச் சட்டத்தின்கீழ் இது வரை ரூ.577.5 கோடி மதிப்பிலான அபராதங்கள் நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப் பட்டது. இதில் சாலை விதிகளை மீறுவோருக்கு அதிகபட்ச அபராதங்கள் விதிக்கப்பட்டன. இச்சட்டம் நாடு முழுவதும் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்ட நிலையில் நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களில் 38 லட்சம் அபராத ரசீதுகள் வழங்கப் பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு தோராயமாக ரூ.577.5 கோடி இருக் கலாம் என நிதின் கட்கரி கூறினார்.

தமிழகம் முதலிடம்

18 மாநிலங்கள் மற்றும் யூனி யன் பிரதேசங்களில் அதிகபட்ச அபராதங்களை விதித்து தமிழ் நாடு முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 14 லட்சம் அப ராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. மிகக் குறைவாக கோவாவில் 58 அப ராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் எதிர்ப்புகள் இருந் தாலும், புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை மாநிலங்கள் உடனடி யாக அமல்படுத்தின. சில மாநிலங் கள் மட்டும் அபராதத் தொகையை குறைவாக நிர்ணயித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

58 mins ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்