ஜிஎஸ்டி வசூல் அக்டோபர் மாதத்தில் சரிவு

By செய்திப்பிரிவு

புதுடில்லி

ஜிஎஸ்டி வசூல் அக்டோபர் மாதத்தில், 95 ஆயிரத்து, 380 கோடி ரூபாய் ஆக குறைந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1 லட்சத்து, 710 கோடி ரூபாயாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. முதல் காலாண்டில் உற்பத்தித் துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சியும் ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. மேலும், ஆட்டோமொபைல் துறையின் ஆகஸ்ட் மாத விற்பனையில் அனைத்து நிறுவனங்களின் விற்பனையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

நாடுமுழுவதும் தொழில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதால் சரக்கு மற்றும் சேவை வரி வசூல்சரிவை சந்தித்து வருகிறது. 1 லட்சம் கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயித்து இருந்தநிலையில் இலக்கை விட குறைவாக வசூலாகி உள்ளது. ஜிஎஸ்டி வசூல் அக்டோபர் மாதத்திலும் சரிவு கண்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில், ஜிஎஸ்டி வசூல் 95 ஆயிரத்து, 380 கோடி ரூபாய் ஆக குறைந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1 லட்சத்து, 710 கோடி ரூபாயாக இருந்தது.

இதில், மத்திய, ஜிஎஸ்டி 17 ஆயிரத்து, 582 கோடி ரூபாய். மாநில ஜிஎஸ்டி வசூல் 23 ஆயிரத்து, 674 கோடி ரூபாய் ஆகும். அதேசமயம் ஒருங்கிணைந்த, ஜிஎஸ்டி வசூல், 46 ஆயிரத்து, 517 கோடி ரூபாய். இதில், இறக்குமதி மூலமாக பெறப்பட்ட ஜிஎஸ்டி 21 ஆயிரத்து 446 கோடி ரூபாய் ஆகு். கூடுதல் வரி மூலம், 7,607 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்