ஜியோவை கடன் இல்லா நிறுவனமாக மாற்ற ரூ.1.08 லட்சம் கோடியில் டிஜிட்டல் வணிகத்துக்காக தனி நிறுவனம்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் டிஜிட்டல் தொடர்பானவணிகத்துக்காக ரூ.1.08 டிரில்லியன் முதலீட்டில் புதிய நிறுவனம்ஒன்றை உருவாக்க உள்ளது. இதற்கான ஒப்புதலை வெள்ளிக்கிழமை அன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு அளித்துள்ளது. இதன் மூலம் தற்போது ஜியோ நிறுவனத்தின் கட்டுபாட்டில் இருக்கும் டிஜிட்டல்தொடர்பான வணிகச் செயல்பாடுகள், அந்தப் புதிய நிறுவனத்துக்கு மாற்றப்படும். ஜியோ நிறுவனத்தின் மீதான கடன்கள் எல்லாம் அந்நிறுவனத்துக்கு மாற்றப்படுகிற நிலையில், ஜியோநிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாக அடையாளப் படுத்தப்படும்.

அதன் மூலம் ஜியோநிறுவனத்தில் புதிய வெளி முதலீடுகளை உருவாக்க ரிலையன்ஸ் திட்டமிட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நிறுவனத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.1.08 டிரில்லியன்முதலீடு செய்ய உள்ளது. தவிர, ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோநிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் ரூ.65,000 கோடி மதிப்பிலான பங்குகளும் அந்தப் புதிய நிறுவனத்துக்கு வழங்கப்படும். ஜியோ நிறுவனத்தின் செயல்பாட்டை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்வதற்காகவே இந்த புதிய நிறுவனம் தொடங்கப்பட உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் மார்ச் மாத முடிவுக்குள் ஜியோ நிறுவனத்தை கடன் ஏதும் இல்லாத நிறுவனமாக மாற்ற ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்தப் புதிய நிறுவனம் ஆரம்பிக்கப்படுகிறது. ‘டிஜிட்டல் தொடர்பான வணிகத்துக்கு என்று தனி நிறுவனத்தை உருவாக்குவதன் மூலம் ஜியோவின் செயல்பாட்டை எளிமைப்படுத்த உள்ளோம்’ என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

தொலைதொடர்பு சேவைகளுக்கான டவர், ஃபைபர் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் அனைத்தும் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்