மும்பையைவிட லண்டனில் ரூபாய் வர்த்தகம் அதிகம்

By செய்திப்பிரிவு

ஆச்சர்யமளிக்கும் விதமாக ரூபாய் வர்த்தகம் மும்பையைவிட லண்டனில் அதிகமாக உள்ளது. லண்டனில் தினசரி ரூபாய் வர்த்தகம் கடந்த ஏப்ரலில் 46.8 பில்லியன் டாலர் அளவாக உயர்ந்துள்ளது. 2016-ம் ஆண்டில் அது 8.8 பில்லியன் டாலராக இருந்தது. கிட்டத்தட்ட இது 5 மடங்கு உயர்வு ஆகும்.

இந்தியாவில் தினசரி ரூபாய் வர்த்தகம் 34.5 பில்லியன் டாலர் அளவிலேயே உள்ளது. சர்வதேச தீர்வுகளுக்கான வங்கி (பிஐஎஸ்) வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்நாட்டில் ரூபாய் வர்த்தகத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அரசு உள்ளது.

கடல் கடந்த ஒருமுனை டாலர்- ரூபாய் வர்த்தகம் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி உள்நாட்டில் ரூபாய் வர்த்தகத்தை அதிகரிக்கச் செய்வதற்கான நட வடிக்கையில் இறங்கி உள்ளன. அதன் ஒரு பகுதியாக இந்தியப் பங்குச் சந்தையில் அந்நிய முதலீட் டாளர்களின் முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் புதிய வழிமுறைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

லண்டனைத் தவிர சிங்கப்பூர், ஹாங்காங், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் ரூபாய் வர்த்தம் கடந்த மூன்று ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரிசர்வ் வங்கியின் குழு, உள்நாட்டில் ரூபாய் வர்த் தகத்தை அதிகரிக்க, வர்த்தக நேரத்தை உயர்த்த வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

வணிகம்

19 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்