ஹைதராபாத்தில் அமேசானின் மிகப்பெரிய வளாகம் திறப்பு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், ஹைதராபாதில் மிகப் பெரிய வளாகத்தைத் திறந்துள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்நிறுவனம் வெளிநாட்டில் அமைத்துள்ள மிகப் பெரிய வளாகம் இதுவாகும். இந்த வளாகத்தில் 15 ஆயிரம் பேர் பணி புரிய முடியும். இந்தியாவில் இந்நிறுவனத்துக்கு 62 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர்.

புதிய வளாகம்

மொத்தம் 30 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த வளாகத்தில் அலுவலக வளாகம் மட்டும் 18 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது. 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம் 9 ஏக்கர் பரப்பளவில் இந்த வளாகம் அமைந்துள்ளது.

புதிய வளாகத்தை தெலுங்கானா துணை முதல்வர் முகம்மது மஹ்மூத் அலி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் ஜெயெஷ் ரஞ்சன் ஆகியோர் திறந்து வைத்தனர். அமேசானின் தலைமையகம் சியாட்டில் நகரில் உள்ளது. அங்கு உள்ளதைப்போலவே சாப்ட்வேர் பணியாளர்கள், மெஷின் லேர்னிங் நிபுணர்கள் உள்ளிட்டோரும் இங்கு பணி புரிகின்றனர்.

இந்நிறுவனம் இந்தியாவில் 500 கோடி டாலர் வரை முதலீடு செய்துள்ளது. மேலும் 50 கோடி டாலரை முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்