வரும் டிசம்பர்முதல் 'நெப்ட்' மூலம் 24 மணிநேரமும் பரிமாற்றம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை,

டிஜிட்டல் பரிமாற்றத்தை நாட்டில் ஊக்கப்படுத்தும் வகையில் வரும் டிசம்பர் மாதம் முதல் 24 மணிநேரமும் என்இஎப்டி(NEFT) பரிமாற்றத்தை செய்யலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் 3-வது நிதிக்கொள்கையை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதில் குறுகியகாலக் கடனுக்கான வட்டி வீதத்தை 0.35 புள்ளிகள் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக நாட்டில் டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றமான 'நெப்ட்' பரிமாற்றத்தை 24 மணி நேரமும் செய்துகொள்ள முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள விதிமுறையின்படி, வாடிக்கையாளர்கள் நெப்ட் மூலம் பணத்தை காலை 8 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டுமே அனைத்து வேலை நாட்களில் பரிமாற்றம் செய்ய முடியும். 2-வது மற்றும் 4-வது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நெப்ட் பரிமாற்றத்தைச் செய்ய முடியாது. இந்த நெப்ட் பரிமாற்றத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு வாடிக்கையாளர் ரூ.2 லட்சம் வரை பரிமாற்றம் செய்யலாம்.

2021 பேமெண்ட் சிஸ்டன் விஸன் திட்டத்தின் படி வரும் டிசம்பர் மாதம் முதல் ஆண்டு முழுவதும் 24 மணிநேரமும் நிப்ட் பரிமாற்றத்தின் கீழ் பணம் அனுப்ப முடியும்.

முன்னதாக, ஜூன் மாத நிதிக்கொள்கையின் போது, ஆர்டிஜிஎஸ் மற்றும் என்இஎப்டி மூலம் செய்யப்படும் பரிமாற்றத்துக்கான கட்டணங்களை நீக்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதன் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கவும் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்