பணப்பரிவர்த்தனை மோசடியை தடுக்க கூகுள் பே செயலியில் கூடுதல் பாதுகாப்பு வசதி அறிமுகம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேலும் பாதுகாப்பாக மாற்று வதற்கு கூகுள் பே நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி இனி கூகுள் பே செயலி மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது அந்த பரிவர்த்தனை தொடர்பான முன் னெச்சரிக்கை விவரங்கள் வாடிக் கையாளர்களின் மொபைல் எண் ணுக்கு குறுந்தகவலாக (எஸ்எம்எஸ்) அனுப்பபடும். இத னால் டிஜிட்டல் பணப்பரிவர்த் தனையின் போது ஏற்படும் மோசடி கள் தடுக்கப்படும் என்று கூறப் படுகிறது.

இதுகுறித்து கூகுள் பே -யின் இயக்குநர் அம்பரிஷ் கென்கி கூறியதாவது: நாங்கள் எங்கள் நிறுவனத்தின் செயலியை பயன் படுத்தும் வாடிக்கையாளர்களின் பணப்பரிவர்த்தனை பாதுகாப்பில் மிகக் கவனமாக உள்ளோம். அந்த பாதுகாப்பை மேலும் அதிகரிக் கும் நோக்கத்துடன் தற்போது புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

அதன்படி, இனி கூகுள் பே செயலி வழியே பணப்பரிவர்த் தனை மேற்கொள்ளும்போது அந்த பரிவர்த்தனை தொடர்பான முன் னெச்சரிக்கை விவரங்கள் வாடிக் கையாளர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். இதன் மூலம் தவறுதலாக மேற் கொள்ளப்படும் பணப்பரிவர்த் தனை தடுக்கப்படும். இது தவிர்த்து கூகுள் பே பல்வேறு பாதுகாப்பு சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. வாடிக்கை யாளர்களின் நம்பிக்கை எங் களுக்கு மிக முக்கியம்’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

12 mins ago

சினிமா

28 mins ago

சினிமா

37 mins ago

சினிமா

40 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

38 mins ago

சினிமா

56 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

50 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்