வேதாந்தா குழுமத்தின் தாமிரச் சுரங்கங்களை விற்கும் ஜாம்பியா திட்டத்துக்கு தெ.ஆ. கோர்ட் முட்டுக்கட்டை 

By செய்திப்பிரிவு

வேதாந்தா குழுமத்தின் தாமிர சுரங்கங்கங்களை ஜாம்பியா விற்பனை செய்யும் திட்டத்துக்கு தென் ஆப்பிரிக்கா நீதிமன்றம் தடை விதித்துள்ளதை வேதாந்தா நிறுவனம் வரவேற்றுள்ளது.

வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் கொன்கோலா காப்பர் சுரங்கங்களை விற்க ஜாம்பியாவுக்கு தென் ஆப்பிரிக்க உயர் நீதிமன்ரம் இந்த வாரத்தில் தடை விதித்தது. 

ஒப்பந்தங்களின் படி இது தொடர்பாக தகராறு எழுந்தால் ஜொஹான்னஸ்பர்க் தீர்ப்பாயம் முடிவெடுக்க ஒப்புக் கொள்ளப்பட்டது, அதன் படி இந்தத் தீர்ப்பு வெளியாக அதனை வேதாந்தா வரவேற்றுள்ளது. 

ஜாம்பியா அரசுடன் வேதாந்தா குழுமம் கடந்த மே மாதம் முதல் மோதலில் இருந்து வருகிறது, அதாவது கொன்கோலா காப்பர் சுரங்கங்களை நடத்த ஜாம்பியா அரசு கலைப்பு அலுவலரை (லிக்விடேட்டர்) நியமித்தது. இந்த கேசிஎம் தாமிர சுரங்க நிறுவனத்தில் ஜாம்பியா அரசுக்கு 20% பங்கு உள்ளது, மீதி வேதாந்தா குழுமத்தினுடையது. இந்நிலையில் வேதாந்தா குழுமம் உரிமத்தின் நிபந்தனைகளை மீறுவதாக ஜாம்பியா அரசு புகார் எழுப்பியது. 

ஆனால் மும்பைப் பங்குச் சந்தையில் லிஸ்ட் ஆகியுள்ள வேதாந்தாவின் கே.சி.எம். சுரங்க நிறுவனம் உரிம நிபந்தனைகளை தாங்கள் மீறவில்லை என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி வேதாந்தா சுரங்கங்களை ஜாம்பியா விற்பனை செய்ய முடியாது என்று தடை விதித்தது. 

ஆகவே முழு தீர்ப்பாய தீர்ப்பு வெளிவரும் வரையில் நிறுவனத்தை விற்கும் முடிவுகளை எடுக்க முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதி லீசெஸ்டர் ஆடம்ஸ் தீர்ப்பளித்தார்.

இதனை எதிர்த்து வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று ஜாம்பியா நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.  ஜாம்பியா நாட்டின் சுரங்கத்துறை அமைச்சர் ரிச்சர்ட் முஸுக்வா, இது குறித்துக் கூறும்போது, “தென் ஆப்பிரிக்கா கோர்ட்டுக்கு ஜாம்பியா மீது எந்த ஒரு சட்ட உரிமையும் இல்லை. ஆகவே அதன் உத்தரவை அமல் செய்யுமாறு ஜாம்பியாவை வற்புறுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

வேதாந்தா நிறுவனம் தங்கள் விரிவாக்கத் திட்டங்கள் பற்றி பொய் கூறுகிறது என்றும் நாட்டுக்கு மிகக்குறைந்த வரியையே செலுத்துகிறது என்றும் குற்றம்சாட்டி இன்னொரு அயல்நாட்டு முதலீட்டாளருக்கு கேசிஎம் சுரங்கங்களை விற்பனை செய்ய ஜாம்பியா முடிவெடுத்தது, ஆனால் தற்போது அந்த முடிவுக்குத்தான் தென் ஆப்பிரிக்க்கா உயர் நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுள்ளது. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

44 mins ago

உலகம்

44 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்