விதிமுறை மீறல்: எஸ்பிஐக்கு ரிசர்வ் வங்கி ரூ. 7  கோடி அபராதம்

By செய்திப்பிரிவு

மும்பை
விதிமுறை மீறல், உத்தரவுகளை பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களுக்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி 7 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
வங்கிகள் செயல்பாடுகளை கண்காணிக்கவும்,நிதி மேலாண்மை சீராக இருக்கவும் வர்த்தக வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதனை பின்பற்றாமல் செயல்படும் வங்கிகள் மீது கடும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மீதும் இத்தகைய நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் 2017-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி நிதிநிலைமை குறித்து தெரிவித்த தகவலின் அடிப்படையில் அங்கு ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது வருமான அங்கீகாரம், சொத்து விதிகள், நடப்பு கணக்குகள் தொடங்குதல், நடத்தை விதிமுறைகள், பெரிய கடன் தகவல் விவரங்கள் அளிப்பது, மோசடி புகார்கள் போன்றவைகளில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தெரிந்தது. 

இதன்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, வாய்மொழி விளக்கம் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை கடைபிடிக்காத காரணத்தால் ரூ.7 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 


 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்