செப்டம்பர் முதல் செயலியில் மட்டுமே பிளிப்கார்ட்

By பிடிஐ

முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் வரும் செப்டம்பர் மாதம் முதல் செயலியில்(ஆப்) மட்டுமே செயல்பட முடிவெடுத்திருக் கிறது. கடந்த வாரம் பணியா ளர்களுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் தலைமை புராடக்ட் அலுவலர் புனித் சோனி இத்தகவலைத் தெரிவித்தார்.

இந்தியாவில் மொபைல் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. எங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களில் 70 முதல் 75 சதவீதம் செயலியின் மூலமே வருகிறார்கள். எங்கள் செயலியில் வாடிக்கையாளர் களுக்குத் தேவையான பல்வேறு சேவைகளை அளிப் பதற்கு எங்கள் செயலி மூலம் பரிசோதித்து வருகிறோம் என்று பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த வருடம் மிந்திரா நிறுவ னத்தை பிளிப்கார்ட் வாங்கியது. இரு மாதங்களுக்கு முன்பு மிந்திரா நிறுவனத்தின் இணையதளம் மூடப்பட்டு செயலியில் மட்டுமே விற்பனை நடைபெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து பிளிப் கார்ட் நிறுவனமும் செயலியில் மட்டுமே விற்பனை செய்யும் திட்டத்தை நடைமுறை படுத்த முயற்சி எடுத்து வருகிறது.

ஆனால் மிந்திரா நிறுவனம் செயலியில் மட்டுமே இயங்கி வருவதால் அதன் விற்பனையில் 10 சதவீதத்துக்கு மேல் சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தவிர மற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களின் தலைவர்களில் செயலியில் மட்டுமே செயல் படுவது சிறந்த செயலாக இருக்காது என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவரின் மொபைலிலும் 15 முதல் 20 செயலிகள் மட்டுமே வைத்திருப்பார்கள். அதற்கு மேல் வைத்திருக்க மாட்டார்கள். செயலியில் மட்டுமே விற்பனை என்பது சரியாக உத்தியாக இருக்காது என்று கருத்து தெரிவித் திருக்கிறார்கள்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

8 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்