இந்திய பங்குச்சந்தையில் இருந்து ஜூன் மாதத்தில் வெளியேறிய அந்நிய முதலீடு ரூ.2,500 கோடி

By பிடிஐ

நடப்பு ஜூன் மாதத்தில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து ரூ.2,500 கோடி முதலீடு வெளியேறியது. மற்ற ஆசிய நாடுகளில் இருக்கும் முதலீட்டு வாய்ப்பு மற்றும் கிரீஸ் பிரச்சினை காரணமாக இந்திய சந்தையில் உள்ள முதலீட்டை அந்நிய முதலீட்டாளர்கள் எடுத்து வருகிறார்கள்.

ஆனால் அதேசமயம் கடன் சந்தையில் ரூ2,300 கோடியை அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்.

இந்திய சந்தையை விட சீன பங்குச்சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு அதிக லாபம் கிடைத்திருப்பதால் அந்நிய முதலீட்டாளர்கள் அங்கு முதலீடு செய்ய ஆரம்பித்திருக் கிறாரகள். மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமானம் குறித்த சந்தேகமும் முதலீட்டாளர்களுக்கு இருப்பதால் முதலீட்டை வெளியே எடுத்து வருகிறார்கள் என்று ஜியோஜித் பி.என்.பி.பரிமா நிறுவ னத்தின் பங்குச்சந்தை நிபுணர் விகே விஜய்குமார் தெரிவித்தார்.

அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது குறித்து கவலை கொள்ளத்தேவை இல்லை. கிரீஸ் பிரச்சினைக்கு முடிவு மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட பின்னர் இந்தியா பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரும் என்று பி.என்.பி. பரிபா மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அலுவலர் (சிஐஓ) ஆனந்த் ஷா தெரிவித்தார்.

நடப்பாண்டில் இதுவரை ரூ.79,768 கோடிக்கு அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு (பங்குச் சந்தை மற்றும் கடன்சந்தை) வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

வணிகம்

18 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

59 mins ago

வாழ்வியல்

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்