கடந்த நிதி ஆண்டின் வளர்ச்சி 7.3%

By செய்திப்பிரிவு

கடந்த நிதி ஆண்டின் (2014-15) வளர்ச்சி விகிதம் 7.3 சதவீத மாக உள்ளது என்று மத்திய புள் ளியியல் அமைப்பு தெரிவித்திருக்கிறது. பெரும்பாலான வல்லு நர்கள் 7.4 சதவீத அளவுக்கு இருக்கும் என்று கணிக்கப் பட்டிருந்த நிலையில் வளர்ச்சி சிறிதளவு குறைந்திருக்கிறது.

2013-14-ம் நிதி ஆண்டில் பொருளாதாரம் 6.9 சதவீத வளர்ச் சியும் அதற்கு முந்தைய நிதி ஆண்டில் 5.1 சதவீத வளர்ச்சியும் இருந்தது. ஜனவரி மார்ச் மாத காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவீதமாக உள்ளது. இதே காலாண்டில் சீனாவின் வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2011-12-ம் ஆண்டினை அடிப் படையாக கொண்டு ஜிடிபி கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் விவசாயத்துறையின் வளர்ச்சி 0.2 சதவீதமாகவும், உற்பத்தி துறையின் வளர்ச்சி 7.1 சதவீதமாகவும், நிதிசேவைகள் பிரிவின் வளர்ச்சி 11.5 சதவீத மாகவும் இருந்தது.

ஜிடிபி தகவல்கள் 2011-12-ம் ஆண்டினை அடிப்படையாக கொண்டது. இருந்தாலும் பெரும் பாலான நிபுணர்களும், சர்வ தேச நிறுவனங்களும் ஜிடிபி தகவல்கள் உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என்றே விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

சந்தை உயர்வு

ஜிடிபி தகவல்கள் பங்குச் சந்தை வர்த்தகம் முடிந்த பிறகு வந்திருந்தாலும், ஜிடிபி எதிர் பார்ப்பு காரணமாக பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிந்தன. மார்ச் காலாண்டில் சீனாவின் வளர்ச்சியை விட அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக சென்செக்ஸ் 322 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்