சீன வங்கிகளிடமிருந்து 250 கோடி டாலர் நிதி திரட்டியது ஏர்டெல்

By பிடிஐ

பார்தி ஏர்டெல் நிறுவனம் சீன வங்கிகளிடமிருந்து 250 கோடி டாலர் நிதி திரட்டியது. சீனா மேம்பாட்டு வங்கி மற்றும் இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்ஷியல் பேங்க் ஆப் சீனா ஆகிய வங்கிகளிடமிருந்து இந்த நிதி திரட்டப்பட்டது.

சீன மேம்பாட்டு வங்கியிடமிருந்து 200 கோடி டாலரும், இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்ஷியல் பேங்க் ஆப் சீனாவிடமிருந்து 50 கோடி டாலரும் திரட்டி இருக்கிறது. இந்த தொகையின் முதிர்வுக் காலம் 9 ஆண்டுகள். சீனா மேம்பாட்டு வங்கி சர்வதேச அளவில் எந்த ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கும் இவ்வளவு தொகையை வழங்கியதில்லை.

இருந்தாலும் ரிசர்வ் வங்கியின் அனுமதிக்குப் பிறகு இவை நடைமுறைக்கு வரும் என்று பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சீன பயணத்தின் போது, அவரது முன்னிலையில் இதற்கான ஒப்பந்ததம் கையெழுத்தானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

24 mins ago

சினிமா

25 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்