பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு 52% குறைக்கப்படும்: மாநிலங்களவையில் ஜெயந்த் சின்ஹா தகவல்

By செய்திப்பிரிவு

பொதுத்துறை வங்கிகளில் அரசுக்குள்ள பங்கு அளவை 52 சதவீத அளவுக்குக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

மாநிலங்களவையில் நேற்று எழுத்து மூலமாக அளித்த பதிலில் அரசின் இந்த நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றார். மூலதனத்தை அதிகரிக்க இயலாத வங்கிகளுக்கு அரசு தொடர்ந்து நிதி உதவி, மாற்று வழிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு நிதி உதவி வழங்குவதில் கடந்த காலங்களில் பல்வேறு வழிமுறைகள் கையாளப்பட்டதாக அவர் கூறினார்.

ரிசர்வ் வங்கியின் மத்திய குழு பரிந்துரைத்துள்ளபடி ரூ. 100, ரூ. 500 மற்றும் ரூ. 1,0000 நோட்டுகளில் எளிதில் கண்டறியும் வகையில் 6 அடையாளங்கள் நிச்சயம் இடம்பெறுவதாக மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில் அவர் கூறினார்.

வங்கதேசத்திலிருந்து இந்தி யாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் அனுப்பிய தொகை 2013-ம் ஆண்டில் 662 கோடி டாலர் என்று உலக வங்கி மதிப்பீடு செய்திருப்பதாக அவர் கூறினார்.

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு இவ்விதம் பணம் அனுப்புவது வழக்கமான பொருளாதார நடவடிக்கைதான். இதேபோல பல்வேறு நாடுகளி லிருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்புவதும் உள்ளது. 2014-ம் ஆண்டில் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த பணம் 7,100 கோடி டாலர் என்று அவர் கூறினார்.

கடன் நிலுவை ரூ.95,122 கோடி

பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்றுள்ள நிறுவனங்களில் 30 நிறுவனங்கள் வைத்துள்ள நிலுவைத் தொகை மட்டும் ரூ. 95,122 கோடியாகும். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி டிசம்பர் 2014 நிலவரப்படி வங்கிகளின் மொத்த வாராக்கடன் அளவு ரூ. 2,60,531 கோடியாகும் என்றார். இதில் ரூ. 10 கோடிக்கும் அதிகமான கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,897 ஆகும் என்றார்.

அமெரிக்காவுடன் ஒப்பந்தம்

வரி தொடர்பான முறைகேடு களைத் தடுக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து ஆராய்ந்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தம் கையெழுத் தானால் இந்திய நிறுவனங்கள் தங்கள் கணக்கு சார்ந்த தகவலை அமெரிக்க வருவாய் பிரிவுக்கு மத்திய வரி ஆணையம் மூலம் தெரிவிக்க வழியேற் படும். அத்துடன் இரு நாடுகளும் வரி தொடர்பான விஷயங் களை பரிமாறிக் கொள்ளமுடியும்.

2 ஆண்டுகளில் 107 வழக்குகள்:

மோசடி நிதி நிறுவனங்கள் தொடர்பாக 2 ஆண்டுகளில் 107 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டு களில் அமலாக்கப் பிரிவினர் 19 நிறுவனங்கள் மீது வழக்கு செய் துள்ளதாக அவர் கூறினார்.

மோசடி நிறுவனங்களில் 96 நிறுவனங்கள் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்