கெய்ர்ன் வரிவிதிப்பு பழைய விவகாரம்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம்

By செய்திப்பிரிவு

கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கு முன் தேதியிட்டு வரி விதித்தது முந்தைய அரசு எடுத்த நடவடிக்கையின் தொடச்சியாகும். இதனை சட்ட வழியில் சரி செய்ய முடியும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்திருக்கிறார். தவிர இதனால் இந்தியாவுக்கு வரும் முதலீடுகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்றார்.

இந்தியாவில் முதலீடு செய்ய பலர் தயாராக இருக்கிறார்கள். இப்போது முதலீட்டாளர்களின் பார்வை இந்தியாவின் மீதுதான் இருக்கிறது என்றார்.

அதே சமயத்தில் முதலீட்டாளர்கள் அரசின் நடவடிக்கையை கூர்ந்து கவனித்து வருகிறார்கள். நாங்கள் ஒரே திசையில்தான் பயணிக்கிறோம். கெய்ர்ன் இந்தியா மீது எடுத்த நடவடிக்கையும் தற்போதைய அரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதனால் முதலீடுகள் பாதிக்கப்படாது. முந்தைய அரசு எடுத்த நடவடிக்கையின் தொடர்ச்சி இது என்று விளக்கம் அளித்தார்.

புதிய அரசு வந்தவுடன் முன் தேதியிட்டு எந்த வரிவிதிப்பும் செய்யமாட்டோம் என்ற கொள்கை முடிவினை எடுத்தோம். இந்த பிரச்சினையில் புதிதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு மத்திய நேர்முக வரி வாரியத்தின் அனுமதி தேவை. நாங்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி வருகிறோம் என்றார்.

இரண்டு நாள் பயணமாக லண்டன் சென்றிருக்கும் ஜேட்லி இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

இந்தியா

46 mins ago

சினிமா

47 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

1 hour ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்