அனைவரையும் பாதிக்கும் சேவை வரி உயர்வு

By செய்திப்பிரிவு

இனி எத்தகைய சேவை பெறுவதற்கும் கூடுதலான தொகை செலுத்த வேண்டியிருக்கும். அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் சேவை வரியை 14 சதவீதமாக உயர்த்தியதால் ஏற்பட்ட விளைவுதான் இது. கடந்த ஆண்டு 12.36 சதவீதமாக இருந்த சேவை வரி இப்போது 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு வெறும் 1.64 சதவீத உயர்வு என்றாலும் அதனால் அனைத்து சேவைகளுக்கும் கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும். சலூனுக்கு செல்வதற்கும், சினிமா பார்ப்பதற்கும், ஆன்லைனில் பூக்களை ஆர்டர் செய்வதற்கும் இனி கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும். சேவை வரி விதிப்புக்குள்ளாகும் அனைத்து பொருள்களின் விலையும் உயர அரசு இதன் மூலம் வழியேற்படுத்தியுள்ளது.

நுகர்வோர் இதனால் பயண டிக்கெட், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவற்றுக்கும் கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும். இதனால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்படும்.

சுற்றுலாப் பயணிகள் ஆண்டுக்கு 75 லட்சம் பேர் வருகை தருகின்றனர். ஆண்டுதோறும் இதன் மூலமான வருமானம் 2,000 கோடி டாலராகும். வரி உயர்வால் இது 1,200 கோடி டாலராகக் குறையும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சேவை வரியை நகராட்சிகளும் விதிக்கும். உதாரணத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஜெய்ப்பூருக்கு வருகை தருகின்றனர். சுற்றுலா வசதியை அளிக்கும் நிறுவனங்கள் சேவை வரியை உயர்த்தும். டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு செல்வதற்கு ஒரு முறை சேவை வரியும், ஜெய்ப்பூரில் ஒரு முறை சேவை வரியும், திரும்பிச் செல்வதற்கு ஒரு முறையும் என வெளிநாட்டுப் பயணிகள் மூன்று முறை சேவை வரி செலுத்த வேண்டியிருக்கும்.

இதனால் வெளிநாட்டுப் பயணிகளின் சுற்றுலா திட்டங்கள் பாதிக்கப்படும் என்று இந்திய சுற்றுலா ஏற்பட்டாளர் அமைப்பின் செயல் இயக்குநர் கௌர் காஞ்சிலால் தெரிவித்தார். இத்தகைய வரி விதிப்பால் சர்வதேச சுற்றுலா பட்டியலில் இந்தியா இடம்பெறுவது குறையும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் முன்னோட்டமாக இது அமைந்துள்ளதாகத் தெரிகிறது என்று கேபிஎம்ஜி நிறுவன தலைவர் சச்சின் மேனன் கூறியுள்ளார். சேவை வரியை கடுமையாக உயர்த்துவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே ஜிஎஸ்டி 16 சதவீதமாக இருக்கும் பட்சத்தில் அதற்கு இணையான அளவுக்கு சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு மேலும் கூடுதலாக சேவை வரி உயர்த்தப்படலாம் என்றும் மேனன் கூறினார்.

சேவை வரி உயர்வால் மல்டிபிளெக்ஸ் வருமானம் பாதிக்கப்படும். டிடிஹெச் நிறுவன சேவையைப் பயன் படுத்துவதும் குறையும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

சினிமா

6 mins ago

இந்தியா

59 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்