சவால்களை சந்திப்போம்!

By மு.முத்தையா

இன்று நிறுவனங்களுக்கும், பணியாளர்களுக்கும் பெரிய சவாலாக அமைந்துள்ளது மிட் கேரியர் மேனேஜ்மென்ட் (Mid-Career Management) என்பது. பொதுவாக புதி தாக வேலையில் சேரும் இளைஞர்கள் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள், கையிலெடுத்த வேலையை விரைவாகச் செயல்படுத்த துடிப்பார்கள்.

காலம் பார்க்காமல் வேலை செய்வார்கள்; இந்த துடிப்பும் ஆர்வமும் வெளிப்படும் முதல் ஐந்து ஆறு வருடங்கள் எந்த பிரச் சனையும் இல்லாமல் ஓடி விடுகிறது.

இச்சூழலில் வருடாந்திர வேலையை மதிப்பீடு செய்கின்ற போது சிறந்த பணி யாளர்களாக (High performer) வரையறுக் கப்படுகிறார்கள். மேலதிகாரியின் பாராட்டைப் பெற்று பதவி உயர்வு பெற்று அடுத்த பதவிக்கு செல்கிறார்கள். இதுவரை எல்லாமே எளிதில் நடந்து விடுகிறது.

பதவி உயர்வு பெற்று செல்கின்ற போது ஏற்கனவே செய்து வந்திருந்த பணிக்குண்டான திறமை (skill sets) தகுதிக்கூறுகள் (traits) செயல் முறைகளை (style) தொடர்ந்து கடை பிடிப்பதை விட்டுக்கொடுக்க முடியாத, விட்டுவிட முடியாத ஒரு குணமாக பலரிடம் அப்படியே தங்கிவிடுகிறது.

நடு வயதில் போராட்டம்

இந்த நேரத்தில் வேலையில் ஒன்பது, பத்து ஆண்டுகள் கழித்து ஒரு நடுப்பகுதிக்கு வந்துவிடுகிறார்கள். ஏற்கெனவே வளர்த்துக்கொண்ட திறமையை விட்டுக் கொடுப்பதும் புதிய திறமையை வளர்த்துக்கொள்வதற்கும் இடையில் நடப்பதுதான் வேலையின் மத்திய காலத்தில நடக்கும் போராட்டம் (Mid-Career Crises) என்று சொல்லுகிறார்கள். நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதுபோல....

முதலாவதாக ஒவ்வொரு பதவி உயர்விலும் நாம் எதை விட்டுகொடுக் கிறோம் என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும் இது சற்று சிரமமானதும்கூட ஒவ்வொரு நிறுவனத்திலும் பதவி உயர்வு பெற்று மேலே செல்லுகின்ற போது அந்த பதவிக்குரிய திறன் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். எனவே புதிய பதவிக்கான தகுதி கூறுகள் என்னவாக இருக்கும் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் என்ன என்பதை தொடர்ந்துகொண்டு அதை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

அதிகரிக்கும் பொறுப்புகள்

உதாரணமாக ஒருவர் தன்னுடைய பணியை ஆரம்பிக்கும் போது அவருக்கு மிகவும் தேவையானது வேலையை செய்து முடிக்கக்கூடிய செயல்திறன் (Execution Excellence) அதே நபர் பதவி உயர்வு பெற்று இரண்டு மூன்று படிகள் மேலே போனால் குழுவை நிர்வகிக்க கூடிய நிலையை அடைகின்றார். குழுவை நிர்வகிக்க கூடிய பொறுப்பை அடைகின்றபோது அதற்குரிய திறன்கள், தகுதிக் கூறுகள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். எனவே அவற்றை வேகமாக புரிந்து கொண்டு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு முதல்படி பழையன கழிதல் மிகவும் அவசியமானதாகும்.

இரண்டாவதாக அவர் தன்னுடைய துறையிலும் சரி தன்னுடைய துறையைச் சாராத நிகழ்வுகளிலும் சரி தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர் தொடர்ந்து அறிந்து கொள்ளவேண்டும். அது சிறிய நிகழ்வாக இருக்கலாம் அல்லது செய்தியாக இருக்கலாம். ஒவ்வொரு நிகழ்வும், செய்தியும் பல சமயங்களில் பயனுள்ளதாக அமையும். நீங்கள் உங்களை விஷயம் தெரிந்தவராக காட்டிக் கொள்ள இப்பழக்கம் உதவும்.

தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்

வேகமாக மாறிவரும் தொழில் நுட்பத் திற்கு ஏற்றவாறு நம்மை மேம்படுத் திக்கொள்வது மிகவும் அவசியம். எந்த துறையை சார்ந்திருந்தாலும் சார்ந்த நிறுவனத்திலோ, வியாபாரத்திலோ உலகளவில் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை தொடர்ந்து தெரிந்து கொண்டே இருக்க வேண்டும்.

என் வேலை, எனது டிபார்ட்மென்ட் என்ற வட்டத்தை விட்டு வெளியே வருவது மிகவும் இன்றியமையாதது. இதற்கு ஒரு எளிதான வழி. யாரைப்பார்த்தாலும் அவரிடமிருந்து புதிதான நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முயற்சி எடுக்கலாம். தன்னைச்சுற்றி நிகழும் விஷயங்களை தெரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும். இது உங்கள் எண்ணத்தின் பரிணாமத்தை (perception) மாற்றுவதற்கு மிகவும் ஏற்ற வழியாகும்.

மதிப்பீடு அவசியம்

மூன்றாவதாக மேலதிகாரிகளிடமோ, சக பணியாளர்களிடமோ தன் வேலையைப் பற்றி மற்றவர் களுடைய மதிப்பீடு, அனுமானம் எவ்வாறு உள்ளது என்பதை தொடர்ந்து தெரிந்து வைத்துக்கொண்டு அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அதற்கேற்றார்ப் போல தன்னை ஒவ்வொரு நிலையிலும் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

இத்தகைய குறிப்புகள் சில சமயங்களில் வெளிப்படையாக புரிந்து கொள்ளமுடியாததாகவும் இருக்கும் (cues and signals). இதற்கு காதுகளையும் கண்களையும் எப்போதும் திறந்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.

“பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்

வகைமை உணவார்ப் பெறின்”

குறிப்பறிந்து செயல்படுவதின் அவசியத்தை வள்ளுவர் அந்தக் காலத்திலேயே கூறியிருக்கிறார். மேலும் நிறுவனங்கள் 360 டிகிரி மதிப்பீடு செய்தால் தயங்காமல்; பங்குபெற்று சுய மதிப்பீடு செய்து கொள்வதும் பெரும் உதவியாக இருக்கும்.

நான்காவதாக பல நேரங்களில் டீமை நிர்வகிக்ககூடிய திறன் (Team Management) இல்லாமல் தவிப்பவர்கள் பலர். நிறுவனங்களில் சாதாரணமாக கேட்கும் உரையாடல் “Good in work but bad in people" பல நேரங்களில் முன்னேற்றத்திற்கு இதுவே பெரிய தடையாக அமைந்து விடும். டீமில் புதிதாக சேர்ந்தவர்களும் இருப்பர்.

நன்றாக வேலை தெரிந்தவர்களும் இருப்பார்கள் ஒன்றிற்கு மேற்பட்ட வேலை செய்யும் திறன் பெற்றவர்களும் இருப்பார்கள், சில நேரங்களில் குறிப்பிட்ட வேலையில் மேலதிகாரியை விட திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். ஒவ்வொருவரையும் எப்படி கையாள வேண்டும், எந்த வகையான தலைமை பண்புகளை (Leadership style) பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியம் ('Different strokes for different folks").

இறுதியாக நமது பணியிடங்களில் நமக்கு தெரிந்து ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகின்றவர்கள் இருப்பார் கள் தொடர்ந்து அவர்களுடைய செயல்பாடுகளை உற்றுக் கவனித்தல், (Observation) கலந்துரையாடல் (Dialogue) மேலும் பல துறையை சேர்ந் தவர்களுடைய தொடர்பை பெருக்கி கொள்வது (Network) மிகவும் பய னுள்ளதாக அமையும். இவ்வாறு படிப் படியாக திறமையை வளர்த்துக் கொள்ளும் போது மிட் கேரியர் கிரைசிஸ் (mid-career crisis) என்ற தாக்கத்தை சமாளிப்பது சாத்தியமே!

muthiahmp@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்