தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை 97 கோடியாக உயர்வு

By பிடிஐ

தொலைபேசி (செல்போன், தரை வழி தொலைபேசி) உபயோகிப்போர் எண்ணிக்கை 2014 டிசம்பர் நிலவரப்படி 97 கோடியாக அதிகரித்துள்ளது. முன்னெப்போதும் இந்த அளவுக்கு உபயோகிப்பாளர் எண்ணிக்கை உயர்ந்ததில்லை என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

பிர்லா குழுமத்தின் அங்கமான ஐடியா செல்லுலர் வாடிக்கையாளர் எண்ணிக்கை டிசம்பரில் 25 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந் ததும் உபயோகிப்பாளர் எண் ணிக்கை அதிகரித்ததற்கு முக்கியக் காரணமாகும்.

இந்தியாவில் தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை நவம்பர் மாதம் 96.42 கோடியாக இருந்தது. இது டிசம்பர் மாதம் 97.09 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தொலை அடர்வு விகிதம் 100 பேருக்கு 77.58 ஆக உள்ளது.

செல்போன் மற்றும் கம்பியில்லா சாதனங்களை உபயோகிக்கும் வாடிக்கையாளர் எண்ணிக்கை கடந்த ஆண்டு அக்டோபரில் 93.53 கோடியாக அதிகரித்தது.

செல்போன் உபயோகிப்பாளர் எண்ணிக்கை டிசம்பரில் 94.39 கோடியாக உள்ளது. இவர்களில் 83 கோடி பேர் கட்டாயம் செல்போன் பயன்படுத்துவோராக உள்ளனர்.

பார்தி ஏர்டெல் நிறுவனம் 21.72 கோடி வாடிக்கையாளர்களுடன் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

வோடபோன் நிறுவனத்துக்கு 17.86 கோடி வாடிக்கையாளரும், ஐடியா செல்லுலருக்கு 15.05 கோடி வாடிக்கையாளர்களும், பிஎஸ்என்எல்-லுக்கு 8.13 கோடி வாடிக்கையாளர்களும், ஏர்செல் 7.86 கோடி வாடிக்கையாளர்களும், டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்துக்கு 6.61 கோடி வாடிக்கையாளர்களும், யுனிநார் நிறுவனத்துக்கு 4.36 கோடி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

டிசம்பரில் ஐடியா நிறுவனத்துக்கு டிசம்பரில் 25 லட்சம் வாடிக்கையாளர்களும், ஏர்டெல் நிறுவனத்துக்கு 17 லட்சம் வாடிக்கையாளர்களும், வோடபோன் நிறுவனத்துக்கு 15 லட்சம் வாடிக்கையாளர்களும், டெலிவிங்ஸ் (யுனிநார்) நிறுவனத்துக்கு 12 லட்சம் வாடிக்கையாளர்களும் சேர்ந்துள்ளனர்.

ஏர்செல் நிறுவனத்துக்கு 9 லட்சம் வாடிக்கையாளர்களும், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துக்கு 6 லட்சம் வாடிக்கையாளர்களும், வீடியோகான் (குவாட்ரன்ட் உள்பட) நிறுவனத்துக்கு 2.7 லட்சம் வாடிக்கையாளர்களும், எம்டிஎன்எல் நிறுவனத்துக்கு 22,445 புதிய வாடிக்கையாளர்களும் டிசம்பரில் சேர்ந்துள்ளனர்.

அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நிறுவனமாக வீடியோகான் நிறுவனமும் அதற்கு அடுத்தபடியாக டெலிவிங்ஸ் நிறுவனமும் உள்ளன.

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் 13 லட்சம் வாடிக்கையாளரை இழந் துள்ளது. இதேபோல சிஸ்டமா சியாமா நிறுவனம் 68,110 வாடிக் கையாளர்களையும், மும்பையைச் சேர்ந்த லூப் மொபைல் நிறுவனம் 7 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

34 mins ago

உலகம்

34 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்