சிறிய நகரங்களில் பி.பி.ஓ அமைக்க அரசு முடிவு

By செய்திப்பிரிவு

பொருளாதார மேம்பாட்டுக்கு நாடு முழுவதிலும் இருக்கும் சிறிய நகரங்களில் பி.பி.ஓ.கள் அமைக்க அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

சிறிய நகரங்களில் பிபிஓ அமைப்பதற்கு தேவையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று துறை அதிகாரி களுக்கு, தான் அறிவுறுத்தி இருப்பதாக அவர் கூறினார்.

புதிய விதிமுறைகள்படி சிறிய நகரங்களில் அமைப்பவர்களுக்கு வரி விலக்கு இருக்கும் என்றும் அவர் கூறினார். பாட்னாவில் அமைக்கப்படவிருக்கும் சாப்ட் வேர்ட் டெக்னாலஜி பார்க் அடிக்கல் நாட்டு விழாவில் இவ்வாறு அவர் தெரிவித்தார். 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவிருக்கும் இந்த பூங்கா இன்னும் 18 மாதங்களில் தயாராகும்.

இதேபோல தொழில்நுட்ப பூங்காக்கள் பிஹார் மாநிலத்தில் பல இடங்களில் அமைக்க வேண்டும் என்று பிஹார் முதல் வரிடம் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிஹார் முதல் வரும் கலந்துகொண்டார்.

பிஹார் முதல்வரும் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதாக ஒப்புக் கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

வர்த்தக உலகம்

5 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்