பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்: ஜிடிபி 7% இருக்கும் என மதிப்பீடு

By செய்திப்பிரிவு

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2-ம் முறையாக பதவியேற்ற பின்பு முதல் பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஜிடிபி எனப்படும் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2019- 20 நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் எனவும், கச்சா எண்ணெய் விலை சர்வதே அளவில் குறைய வாய்ப்பு இருப்பதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறை யாக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. இந்நிலையில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்திராகாந்திக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பட் ஜெட் தாக்கல் செய்யும் இரண் டாவது பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறவுள்ளார்.

கடந்த பிப்ரவரியில் இடைக் கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சிக்கு வரும் வரையிலான நான்கு மாத செலவினங்களுக்கான ஒப்புதல் கேட்கும் பட்ஜெட் டாக அது அமைந்தது. இதைத் தொடர்ந்து முழு பட்ஜெட் தற் போது தாக்கல் செய்யப்பட உள்ளது.

முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று சமர்பிக்கப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அடுத்த நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும். கடந்த நிதி ஆண்டில் 6.4 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை இந்த நிதியாண்டில் 5.8 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை இந்த நிதி ஆண்டில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025-ம் ஆண்டில் இந்திய 5 டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக வளரும். நீண்டகால அடிப்படையில் நமது பொருளாதாரம் வளர்ந்து 8 சதவீதம் என்ற அளவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்