2019-20 பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: தங்கம், சிகரெட், பெட்ரோல் டீசலுக்கு வரிவிதிப்பு: வீட்டுக்கடன், இ- வாகனம் வாங்கியவர்களுக்கு வரிச்சலுகை

By பிடிஐ

தங்கம், பெட்ரோல், சிகரெட்டுக்கு விரிவிதிப்பு, பணக்காரர்களுக்கு கூடுதல் வரி, கார்ப்பரேட் வரி குறைவு, வீட்டுக்கடன், மின்னணு வாகனக் கடன் வாங்கியவர்களுக்கு வருமானவரிச் சலுகை போன்றவை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையிலான அரசு  2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த அரசின் முதலாவது பட்ஜெட்டை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு-

* பான் கார்டும், ஆதார் கார்டும் மாற்றிக் கொள்ளத்தக்க வகையில் வரப்போகிறது. அதாவது வருமானவரி செலுத்தும்போது பான்கார்டு இல்லாவிட்டால், ஆதார் எண்ணை மட்டும் அளித்து ஐடி ரிட்டனை தாக்கல் செய்யலாம்.

 * மின்னணு வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் குறைக்கப்படும். மின்னணு வாகங்களை வாங்க வங்கியில் கடன் பெற்று வட்டி செலுத்திவந்தால், 1.5 லட்சம் வரை வருமானவரி விலக்கு அளிக்கப்படும்.

 * வீட்டுக்கடன் பெற்றிருப்பவர்களுக்கு 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கூடுதலாக ரூ.1.50 லட்சம் வரை வருமானவரி விலக்கு அளிக்கப்படும். இதன் மூலம் வீடு வாங்குவோர் ரூ.7 லட்சம்வரை பயன்பெறுவார்கள்.

 * வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியா வந்தபின் எந்தவிதமான காத்திருப்பும் இன்றி ஆதார் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 * ஒரு ரூபாய் முதல் ரூ.20 வரை புதிய சில்லரைக் காசுகள் விரைவில் புழக்கத்துக்கு விடப்படும்.

 * பெட்ரோல், டீசல் மீதான கூடுதல்வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

 * வர்த்தகத்தில் ரொக்கப்பரிமாற்றத்தை குறைக்கும் வகையில் ஆண்டுக்கு ஒரு  கோடி   ரூபாய்க்கும்   அதிகமாக   வங்கியில் இருந்து பணம் எடுத்தால், 2 சதவீதம் வரி விதிப்பு

 * அரசு வங்கிகளுக்கு மறுமுதலீடாக ரூ.70 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க உள்ளது.

 

  * இந்த ஆண்டில் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தவன் மூலம்  ரூ.1.05 லட்சம் கோடி திரட்ட  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்த, விரைவில் புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படும்.

 * புதிய தேசிய அளவிலான கல்விக்கொள்கை விரைவில் வெளியிடப்படும். இந்தியக் கல்வியை புதிய கோணத்துக்கு பரிமாற்றம் செய்து உலக அளவில் மாணவர்களை ஈர்க்கும் வகையில்  சிறப்பானதாக மாற்றும்.

 * ரயில்வே கட்டுமானத்துக்கு ரூ.50 லட்சம் கோடி திட்டம்

*  தேசத்தின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 2022-ம் ஆண்டில் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் மின்சாரம், சமையல் கேஸ் இணைப்பு வழங்கப்படும்.

*  3 கோடி சில்லரை வர்த்தகர்களுக்கு பிரதமர் கரம் யோகி மான் தான் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்கு வர்த்தகர்களிடம் ஆதார் எண்ணும், வங்கிக்கணக்கும் வைத்திருக்க வேண்டும்.

* ஆண்டுக்கு ரூ.400 கோடிவரை விற்றுமுதல் இருக்கும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.250 கோடிவரை விற்றுமுதல் இருக்கும் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச வரி விதிக்கப்படும்.

* தங்கம் இறக்குமதி செய்யப்படும் போது விதிக்கபடும் சங்கவரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரையில் பதிக்கும் டைல்ஸ் கற்கள், முந்திரி பருப்பு, ஆட்டோமொபைல் பாகங்கள், செயற்கை ரப்பர், டிஜி்ட்டல் கேமிரா, சிசிடிவி கேமிரா ஆகியவற்றுக்கான அடிப்படை சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளது.

* சிகரெட்டின் நீளம் 65மிமீட்டருக்கு அதிகமாக இருந்தால், 1000 சிகரெட்டுக்கு ரூ.5 சுங்கவரி விதிக்கப்படும். மென்று சுவைப்படும் புகையில், ஜர்தா, புகையிலை தொடர்பான பொருட்களுக்கு 0.5 சதவீதம் வரி விதிக்கப்படும்.

* ஆண்டுக்கு ரூ.5 கோடி விற்றுமுதல் இருக்கும் நிறுவனங்கள் காலாண்டுக்கு ஒருமுறை மட்டும் ரிட்டன் தாக்கல் செய்யும் முறை கொண்டுவரப்பட உள்ளது.

*பணமில்லா பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், ரூ.50 கோடிவரை விற்றுமுதல் இருப்பவர்கள், பிம், யுபிஐ, ஆதார்பே, என்இஎப்டி, ஆர்டிஜிஎஸ் ஆகியவற்றின் மூலம் பணப்பரிமாற்றம்  செய்தால், கட்டணம் விதிக்கப்படாது.

* அடுத்த 5ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடியை அடிப்படை கட்டுமானத்துக்கு மத்திய அரசு செலவிட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

45 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்