சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையால் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன: டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் தகவல்

By செய்திப்பிரிவு

ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு பின்னர் சரக்கு போக்குவரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். தினேஷ் கூறியதாவது:

நிறுவனம் சர்வதேச அளவில் பல புதிய உத்திகளுடன் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. தற்போது சர்வதேச அளவிலான செயல்பாடுகளில் 100 கோடி டாலர் வருமான இலக்கை எட்டியுள்ளோம். 2021-ம் நிதியாண்டுக்குள் இந்திய செயல்பாடுகளின் மூலம் 100 கோடி டாலர் அளவுக்கு எட்ட இலக்கு வைத்துள்ளோம். மேலும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி 30 சதவீதமாக உள்ளது. இந்திய செயல்பாடுகளை மேம்படுத்த புதிய உத்திகளை வகுத்துள்ளோம்.

ஆட்டோமொபைல், சில்லரை வர்த்தகம், நுகர்பொருள் , எலெக்ட்ரானிக், தொலைத் தொடர்பு மற்றும் பாதுகாப்பு துறைகளில் ஒருங்கிணைந்த சரக்கு கையாளுதல் சேவைகளை நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டி சட்டத்துக்கு பின்னர் இந்திய சரக்கு போக்குவரத்தில் உருவாகியுள்ள புதிய வாய்ப்புகளை நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும் என்றார். சரக்கு போக்குவரத்து சேவையில், சர்வதேச போட்டியாளர்கள், உள்ளூர் சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் இருந்தாலும் ஒருங்கிணைந்த முறையிலான சேவையை வழங்குவதால் தங்களுக்கு போட்டியாளர்கள் இல்லை என்றும் கூறினார்.

நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.ரவிச்சந்திரன் பேசுகையில், இந்தியாவில் 30 சதவீதமாக உள்ள வளர்ச்சியை அடுத்த மூன்று ஆண்டுகளில் 35 முதல் 40 சதவீதமாக உயர்த்தவும், சர்வதேச அளவில் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கவும் இலக்கு வைத்துள்ளோம் என்றார். நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆர்.சங்கர் பேசுகையில், ஜிஎஸ்டி சட்டத்துக்கு பின்னர் இந்திய சரக்கு போக்குவரத்தில் உருவாகியுள்ள புதிய வாய்ப்புகளை நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்