ரவி வெங்கடேசன் வெளியேற வேண்டும்:இன்ஃபோசிஸ் முன்னாள் சிஎப்ஓ கருத்து

By செய்திப்பிரிவு

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணைத் தலைவராக இருந்த ரவி வெங்கடேசன் அந்த பொறுப்பில் இருந்து விலகி, இயக்குநர் குழுவில் இருக்கிறார். இயக்குநர் குழுவில் இருந்தும் அவர் வெளியேற வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். மேலும் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் நந்தன் நிலகேணி குறைந்தபட்சம் மூன்று ஆண்டு களுக்கு தலைவர் பதவியில் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: 2014-ம் ஆண்டு சோதனை முயற்சியாக, இயக்குநர் குழு சரியாக வழிநடத்தும் என்னும் நம்பிக்கையில், நிறுவனர் அல்லாத ஒருவர் தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அந்த சோதனை முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இனியும் அப்படி ஒரு முயற்சி தோல்வி அடைய கூடாது. நிறு வனத்தின் எதிர்காலத்தை உறுதி செய்த பிறகே நிலகேணி தலைவர் பொறுப்பில் இருந்து வெளியேற வேண்டும். அதே போல இயக்குநர் குழுவை வழி நடத்த சிறந்த தலைவர் வேண்டும். நிலகேணி இதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இயக்குநர் குழுவை மறுசீரமைப்பு செய்ய வேண்டும், புதிய தலைமைச் செயல் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிலகேணி தலைவராக தொடர வேண்டும்.

கடந்த கால பிரச்சினைகளுக்கு இயக்குநர் குழுதான் காரணம். இந்த குழுவை மாற்றி அமைக்க வேண்டும். பனாயா நிறுவனம் கையகப்படுத்தல் தொடர்பாக பிரச்சினை எழுந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையை வெளி யிட வேண்டும் என்றார். இந்த நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அல்லது இயக்குநர் குழு பொறுப்பு வழங்கப்பட்டால் ஏற்றுக்கொள்வீர்களா என்னும் கேள்விக்கு முடியாது என்று பாலகிருஷ்ணன் மறுத்துவிட்டார். மேலும், ``மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிறுவனத்தில் இருந்து வெளியேறினேன். தற்போது வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். ஆனால் இன்ஃபோசிஸில் இருந்து வெளியேறிய அசோக் வெமுரி, பி.ஜி.ஸ்ரீனிவாசஸ், மோகன் உள்ளிட்ட பலர் இருக்கிறார்’’ என்று பாலகிருஷ்ணன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

21 mins ago

சினிமா

26 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்