ஸ்பைஸ்ஜெட் மேல் முறையீட்டு வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

By பிடிஐ

கலாநிதி மாறனுக்கு எதிராக ஸ்பைஸ்ஜெட் மற்றும் அதன் இணை நிறுவனர் அஜய் சிங் தொடுத்த மேல்முறையீட்டு மனுவை புதுடெல்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீதிபதிகள் எஸ்.ராவீந்திர பட் மற்றும் யோகேஷ் கண்ணா ஆகி யோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே தனி நீதி பதி அளித்த உத்தரவை மாற்றி யுள்ளனர்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகளை மாற்றிய வகையில் அதன் முன்னாள் தலைவர் கலாநிதிமாறனுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ரூ.579 கோடியை அளிக்க வேண்டியுள்ளது.

2015-ம் ஆண்டில் பங்கு களை மாற்றும்போது செய்து கொண்ட ஒப்பந்தத் தின்படி இந்த தொகையை வழங்காததால் கலாநிதி மாறன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொகையை ஐந்து தவணையாக செலுத்துமாறும், முதல் தவ ணையை 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் செலுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டே உத்தர விட்டது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மேல் முறையீடு செய் தது.

தற்போது இந்த மேல் முறை யீட்டு வழக்கை டெல்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித் துள்ளது. இந்த தொகையை ஜூலை இறுதிக்குள் பகுதி தொகைக்கான வங்கி உத்தரவாதத்தை அளிக்கவும், மீதித் தொகையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் ரொக்கமாக அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள் ளனர். ஏற்கெனவே தனி நீதிபதி 12 மாதங்களில் தவணையை அளிக்க வேண்டும் என்று அளித்த உத்தரவையும் இதன் மூலம் மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக ஸ்பைஸ்ஜெட் தனது வாதத்தில் கலாநிதி மாறனின் தலைமையில் இயங்கிய போது நிறுவனத்துக்கு ரூ.2,000 கோடி கடன் ஏற்பட்டதாகவும் வாதிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்