புதிய ரூ.2000 நோட்டை திரும்பப் பெறும் திட்டமில்லை: ஜேட்லி

By பிடிஐ

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகப்படுத்திய புதிய 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த ஜேட்லி, இவ்வாறு கூறினார். அத்துடன் டிசம்பர் 10, 2016 தேதி வரை, ரூ.12.44 லட்சம் கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஆர்பிஐக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் பேசிய ஜேட்லி, ''இந்த புள்ளிவிவரத் தொகை கையில் இருக்கும் ரொக்கப் பணத்தோடு ஒப்பிடப்படும். இதன்மூலம் தவறுகளையும், இரண்டு முறை எண்ணப்பட்ட தொகையையும் கண்டறியலாம். கள்ளப்பணத்தையும் இதன்மூலம் ஒழிக்கமுடியும்.

மார்ச் 3, 2017 அன்று, ரூ.12 லட்சம் கோடிகளும், ஜனவரி 27 அன்று ரூ.9.921 லட்சம் கோடிகளும் புழக்கத்தில் இருந்தன.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம், நாட்டின் ஜிடிபி பெரிதாகவும், உண்மையாகவும், தூய்மையாகவும் இருக்கும். ஊழலையும், கருப்புப்பணத்தையும் ஒழிக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அத்துடன் கள்ள நோட்டுகளும், தீவிரவாதத்துக்கு அளிக்கப்படும் நிதியும் தடுத்து நிறுத்தப்படும்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் வங்கிகளில் டெபாசிட் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் வட்டி விகிதம் குறையும்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

விளையாட்டு

27 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

53 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

51 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்