லிபா ஸ்டார்ட் அப் கருத்தரங்கு

By செய்திப்பிரிவு

சென்னை லிபா நிறுவனம் (லயோலா நிர்வாகவியல் கல்லூரி) நேற்று ஸ்டார்ட்-அப் தொடர்பான கருத்தரங்கினை நடத்தியது. இதில் ப்ரெஷ்டெஸ்க் நிறுவனர் கிரிஷ்மாத்ருபூதம், முதலீட்டாளர் ராம்ராஜ், தைரோகேர் நிறுவனர் ஏ.வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய கிரிஷ் மாத்ரு பூதம், சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் அல்லது ஈரோட்டில் பிரபலமான பிரியாணி கிடைத்தது. அதனை இப்போது பல ஊர்களுக்கு மட்டுமல்லாமல் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தி இருக்கின்றனர். எம்பிஏ படிப்பு என்பது எப்படி விரிவுபடுத்த முடியும் என்பதைதான் சொல்லிக்கொடுக்கும். ஆனால் பிரியாணி செய்ய வேண்டுமா, அதனை எப்படி சிறப்பாக செய்ய வேண்டும் என்பதை எம்பிஏ மாண வர்களான நீங்கள்தான் கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறி னார். தற்போது சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பிரச்சினை இருப் பதால், ஒட்டுமொத்த துறையும் சிக்கலில் இருப்பதாக நினைக்க வேண்டாம் என கிரீஷ் கூறினார்.

தைரோகேர் நிறுவனத்தின் நிறுவனர் வேலுமணி தன்னுடைய தொழில்முனைவு வாழ்க்கையை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார். அப்போது உங்களிடம் நல்ல பிரியாணி (தொழில் ஐடியா) இருந்தால் எந்த விதமான வென்ச்சர் கேபிடல் நிதியும் தேவையில்லை. மாறாக பிரியாணி நன்றாக இல்லை என்றால், எவ்வளவு நிதி கைவசம் இருந்தாலும் தொழிலில் வெற்றி பெற முடியாது என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்