உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய மேம்படுத்தப்பட்ட போக்கு வரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மாநாட்டில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் போடப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கடந்த 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை டெல்லியில் இந்திய மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சிஐஐ மற்றும் பிக்கி ஆகிய தொழிலக கூட்டமைப்புகள் இணைந்து நடத்தின. இந்த மாநாட்டில் நிறுவனங்களுடன் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் சுமார் 34 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொண்டது. இந்த 34 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2 லட்ச கோடி ரூபாய் முதலீடு வரும் என கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறிய தாவது: திட்டங்களை செயல்படுத் துவதற்காக மாநிலங்களின் உத வியை நாட இருக்கிறோம். மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள், மேம்படுத்தப்பட்ட சோதனை மையங்கள், லேண்ட் போர்ட்ஸ், துறைமுக இணைப்பை பலப் படுத்துவது, தொழில்நுட்பம் சார்ந்து லாஜிஸ்டிக்ஸ் திறனை மேம்படுத்துவது போன்ற திட் டங்களை கொண்டுவருவதற்காக மாநில அரசின் உதவியை நாட இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள் அமைப்பதற்காக அதானி லாஜிஸ்டிக்ஸ், அசெண் டஸ் அச்சிவர்ஸ் இன்ப்ரா சொல் யூசன்ஸ், சென்னை துறைமுக டிரஸ்ட், விசாகப்பட்டிணம் துறை முக டிரஸ்ட், பியூச்சர் மார்க்கெட் நெட்வொர்க்ஸ் ஆகிய நிறு வனங்களுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள் குத்தகை அடிப்படையில் அமைக்கப்பட உள்ளன.

துறைமுக இணைப்பை மேம்படுத்துவதற்காக ஜேஎன் துறைமுக டிரஸ்ட், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் இந்திய லேண்ட் போர்ட்ஸ் ஆணையம் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

55 mins ago

ஜோதிடம்

52 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்