ஆன்லைன் மூலம் பிஎப் பணம் எடுக்கும் வசதி மே மாதம் அறிமுகம்: பிஎப் ஆணையர் விபி ஜாய் தகவல்

By செய்திப்பிரிவு

வருங்கால வைப்பு நிதி பணத்தை எடுப்பது, இழப்பீடு பெறுவது, ஓய்வூதிய தொகையை நிர்ணயம் செய்வது உள்ளிட்டவற்றை, வரும் மே மாதம் முதல் ஆன்லைன் மூலம் பெறலாம் என பிஎப் ஆணையர் விபி ஜாய் தெரிவித்தார். தற்போது இந்த அனைத்துவிதமான வேலைகளும் பணியாளர்கள் மூலமாகவே நடைபெற்றுவருகின்றன.

இது தொடர்பாக விபி ஜாய் மேலும் கூறியதாவது:

அனைத்துவிதமான சேவைக ளைப் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் அனுப்ப வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து பிஎப் அலுவலகங்களையும் சர்வரில் இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் இரு மாதங்களில் அந்தப் பணி முடிவடையும். அதன்பிறகு அனைத்து சேவைகளுக்கும் ஆன் லைன் மூலமே விண்ணப்பிக்கலாம்.ஆன்லைன் மூலம் இழப்பீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட சில மணிநேரங்களில் இழப்பீடு வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம் என்றார்.

தற்போது அனைத்துவிதமான தொகையும் (பிஎப் பணத்தை எடுப்பது, இழப்பீடு உள்ளிட்ட அனைத்தும்), விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்பட்டதில் இருந்து 20 நாட்கள் வரை தேவைப் படும். தற்போது 50 அலுவல கங்களை சர்வரில் இணைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

முன்னதாக, பிஎப் கணக்கு வைத்திருக்கும் சந்தாதாரர்கள் தங்க ளது ஆதார் அடையாள அட்டை எண்ணை மார்ச் மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என பிஎப் அமைப்பு தெரிவித்திருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

க்ரைம்

36 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்