இங்கிலாந்தின் பணக்கார ஆசியர் ஹிந்துஜா சகோதரர்கள்

By செய்திப்பிரிவு

வெளிநாட்டு வாழ் இந்தியர்களான ஹிந்துஜா சகோதரர்கள், இங் கிலாந்தில் இருக்கும் பணக்கார ஆசியர் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 1,900 கோடி பவுண்ட். கடந்த ஆண்டை விட 250 கோடி பவுண்ட் அதிகரித்திருக்கிறது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் லஷ்மி மிட்டல் இருக் கிறார். இவரது சொத்து மதிப்பு 1,260 கோடி பவுண்ட். கடந்த ஆண்டை விட 640 கோடி பவுண்ட் அதிகரித்திருக்கிறது.

ஹிந்துஜா சகோதரர்கள் நால் வர். இவர்களில் ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஆகியோர் லண்டனில் இருக்கிறார்கள். பிரகாஷ் ஜெனீ வாவிலும், அசோக் மும்பையிலு வசிக்கின்றனர். ஹிந்துஜா குழு மத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட், இண்டஸ்இந்த் வங்கி, கல்ப் ஆயில் ஆகிய பிரிவுகளில் லாபம் அதிகரித்திருக்கிறது.

இங்கிலாந்தில் இருக்கும் ஆசிய பணக்காரர்களின் (101 நபர் கள்) சொத்து மதிப்பு 6,990 கோடி பவுண்ட் ஆகும். இவர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகரித்திருக் கிறது. ஆசிய பணக்காரர்களின் கடந்த ஆண்டு சொத்து 5,540 கோடி பவுண்ட்.

இண்டோராமா கார்ப்பரேஷன் (பெட்ரோகெமிக்கல்ஸ்) தலைவர் பிரகாஷ் லோகியா இந்த பட்டி யலில் 3-வது இடத்தில் இருக் கிறார். இவரது சொத்து மதிப்பு 400 கோடி பவுண்ட். வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் 4-வது இடத்தில் இருக் கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

50 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்