இந்திய கைவினை பொருட்களை உலக சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும்: ஆடம்பர வர்த்தக கருத்தரங்கில் நிர்மலா சீதாராமன் பேச்சு

By பிடிஐ

இந்திய கைவினைப் பொருட் களை உலக சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார். ஆடம்பர வர்த்தக துறை, இந்திய கைவினைஞர்களை அங்கீகரித்து அவர்கள் சர்வதேச வர்த்தகத்துக்குச் செல்ல உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

’2017 ஆடம்பர வர்த்தக’ கருத் தரங்கில் கலந்து கொண்ட அமைச்சர் இதைக் குறிப்பிட் டுள்ளார். நமது நாட்டில் மிகத் திறமையான கைவினைஞர்கள் பலர் குறைந்தபட்ச ஊதியம் பெற, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வரிசையில் நிற்கின்றனர் என்று அமைச்சர் தனது வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் பேசுகையில்,

இந்தியாவின் பல்வேறு பகுதி களிலும் உள்ள கைவினைஞர் களை ஆடம்பர வர்த்தகத் துறை யினர் அடையாளம் கண்டு அவர் களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும். இதை எனது கோரிக்கையாக முன்வைக்கிறேன் என்று குறிப்பிட்டதுடன், கைவினை ஞர்கள் மற்றும் அவர்களது தொழில்களை மேம்படுத்த அரசால் மட்டுமே முடியாது. அவர்களுக்கு வெளியிலிருந்தும் உதவி தேவையாக உள்ளது. ஆடம்பர தொழில் துறைக்கு அதற்கான சாத்தியம் உள்ளது. அவர்களுக்கான சந்தையை உருவாக்க நீங்கள் பாலமாக இருக்க வேண்டும். இந்த துறையின் முன்னணி நிறுவனங்கள் இவற்றை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

ரூ.2 லட்சம் கோடி சந்தை

தற்போது 700 முதல் 800 கோடி டாலர் சந்தை மதிப்பை கொண்டுள்ளது. இந்த துறை வளர்ச்சி அடிப்படையில் அடுத்த எட்டு ஆண்டுகளில் 10,000 கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டும். இந்த துறையில் கவனம் குவிப்பது உண்மையாகவே நாம் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை உறுதிபடுத்துவதுபோல இருக்கும்.

கைவினை துறை சர்வதேச அளவில் 2 லட்சம் கோடி சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது. அதில் 30 சதவீதத்தை பிரிக்ஸ் நாடுகள் வைத்துள்ளன என்றும் அமைச்சர் கூறினார். ஆனால் பிரிக்ஸ் நாடுகளில் இந்தியா மட்டுமே 7.2 சதவீத வளர்ச்சியை எட்டும். 7 சதவீதத்துக்கும் மேலான சீரான வளர்ச்சியை இந்தியா கொண்டுள்ளது. ஆடம்பர தொழில் துறை வளரும் அதே வேளையில் இந்த கைவினை தொழில்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தியாவில் அதிக சொத்து மதிப்பு கொண்டுள்ளவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6 சதவீத கோடீஸ்வரர்கள் இந்தியாவில் இருப்பார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

32 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்