மல்லையாவின் ரூ.4,200 கோடி சொத்துகள் அமலாக்கத்துறை பறிமுதல் செய்ய நீதிமன்றம் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

மல்லையா மீதான பணமோசடி வழக்கில் ரூ.4,200 கோடி சொத்து களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ய சிறப்பு நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மல்லையாவுக்கு சொந்தமான மற்றும் மல்லையாவுக்கு மறைமுக உரிமை உள்ள நிலங்கள், பண்ணை வீடுகள், பங்கு மற்றும் நிதி முதலீடுகள் உள்ளிட்டவற்றை மல்லையா மீதான பண மோசடி தடுப்பு வழக்கில் இணைக்க வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமலாக்கத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த சொத்து களின் புத்தக மதிப்பு ரூ.4,234.84 கோடியாகும். இந்த சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.6,630 கோடி என அமலாக்கத்துறை மதிப்பிட் டிருந்தது.

இது தொடர்பாக கூறிய பணமோசடி தடுப்பு வழக்கின் நீதி சட்டப்பிரிவு உறுப்பினர் துஷார் வி ஷா, இந்த சொத்துகள் பண மோசடி தொடர்புடைய சொத்துகள்தான், இந்த சொத்துகளை வழக்கில் சேர்த்தது சரியே என்று கூறினார். மேலும் பணமோசடி குற்றத்தில் தொடர்புடைய சொத்துகளை இந்த வழக்கில் சேர்க்க உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப் பிட்டார். வங்கிகளில் கடன் வாங்கி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் யுனை டெட் பிரூவரீஸ் பெயரில் கூட்டுச் சதி செய்துள்ளார் என்றும், மொத்த கடனில் இந்த தொகை முதன்மை யானது என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 min ago

சினிமா

52 mins ago

வலைஞர் பக்கம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்