ஹருஹிகோ குரோடா - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

# ஜப்பானின் மத்திய வங்கியான பேங்க் ஆப் ஜப்பானின் கவர்னர். 2018 ஏப்ரல் வரை இந்த பதவியில் இருப்பார்.

# டோக்கியோ பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் உடலியல் முடித்தவர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நோபல் பரிசு பெற்ற ஜான் ஹிக்ஸ் உள்ளிட்ட பிரபல பேராசிரியர்களிடம் கற்றவர்.

# 1967-ம் ஆண்டு ஜப்பான் நிதி அமைச்சகத்தில் இணைந்தார். 1975-ம் ஆண்டு சர்வதேச நிதி மையத்தின் (ஜப்பானில்) செயல் இயக்குநராக இருந்தார். 1999-ம் ஆண்டு நிதி மற்றும் சர்வதேச விவகாரத்துறையில் துணை அமைச்சராகவும் இருந்தார்.

# ஜப்பான் மத்திய வங்கி பொறுப்பேற்கும் முன்பு ஆசிய மேம்பாட்டு வங்கியின் தலைவராக இருந்தார்.

# இந்த பொறுப்புக்கு வருவதற்கு பணவாட்டத்தை ஜப்பான் மத்திய வங்கி சரியாகக் கையாளவில்லை என்று அதன் செயல்பாடுகள் குறித்து விமர்சனமும் செய்திருக்கிறார்.

# ஜப்பான் பொருளாதாரத்தை பணவாட்டத்திலிருந்து 2 சதவீத பணவீக்கம் என்ற நிலைக்கு உயர்த்துவதற்காக சமீபத்தில் ஊக்க நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்