விருப்ப வெளியேறும் திட்டம்: காக்னிசென்ட் விளக்கம்

By செய்திப்பிரிவு

இந்தியா மற்றும் அமெரிக்காவில் முதல் முறையாக விருப்ப வெளி யேறும் திட்டத்தை அறிவிக்கிறோம். ஆனால் மற்ற நிறுவனங்கள் இது போன்ற நடவடிக்கையை அடிக்கடி எடுத்து வருவதாக காக்னிசென்ட் நிறுவனம் விளக்கம் அளித்திருக் கிறது. நிறுவனத்தின் மூத்த பணி யாளர்கள் 6 முதல் 9 மாத சம்ப ளத்தை வாங்கிக்கொண்டு வெளி யேறும் திட்டத்தை இம்மாத தொடக் கத்தில் காக்னிசென்ட் அறிவித்தது.

இது தொடர்பாக காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் மேத்தா பணியாளர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருப்பதாவது: நம்முடைய போட்டி நிறுவனங்கள் இதுபோன்ற நடவடிக்கையை அடிக்கடி எடுத்து வருகின்றன. நம்முடைய அடுத்த தலைமுறை பணியாளர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு இது.

விருப்பப்பட்டவர்கள் வெளி யேறலாம் என பெயரிலே தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்த திட்டத்தில் வெளியேறு மாறு யாரையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. மூத்த அதிகாரிகள் தங்களின் வாழ்க்கையை, வேலையை மாற்றிக்கொள்வதற் கான வாய்ப்பாக இந்த திட்டம் இருக்கும்.

நிறுவனம் லே-ஆப் எதனையும் அறிவிக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் பணியாளர்களின் செயல் பாடுகளை பரிசீலனை செய்கி றோம். உலகம் முழுவதும் உள்ளூர் பணியாளர்களை தொடர்ந்து பணியமர்த்தி வருகிறோம். அமெரிக்காவில் பணியாளர்களை கடந்த சில ஆண்டுகளாக பணியமர்த்தி வருகிறோம். இப்போது தொடர்கிறோம்.

ஆனால் ஐடி பணியாளர் களுக்கான சங்கம் (எப்ஐடிஇ) சென்னை, ஹைதராபாத், பூணே ஆகிய நகரங்களில் தொழிலாளர் ஆணையத்திடம் முறையிட்டிருக் கிறது. கட்டாயப்படுத்தி வேலை யில் இருந்து காக்னிசென்ட் நீக்குவதாகவும், அதிக சம்பளம் வாங்குபவர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு குறைந்த சம்பளத்தில் பணியாளர்களை எடுக்க நிறுவனம் முடிவெடுத்திருப்ப தாகவும் இந்த சங்கம் குற்றம் சாட்டியிருக்கிறது.

இது தொடர்பான விசாரணை யின் போது, இன்னும் இரு வாரத் தில் பதில் அளிப்பதாக காக்னி சென்ட் தெரிவித்திருந்தது.

-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

49 mins ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்