`டிஜிட்டல் செலவை உயர்த்த வேண்டும்’

By செய்திப்பிரிவு

அரசாங்கம் டிஜிட்டல் துறைக்கு செய்யும் செலவுகளை உயர்த்த வேண்டும். இதன் மூலம் ஐடி பிரிவு வளரும். அதனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உள்நாட்டிலேயே போதுமான சந்தை இருப்பதால், வெளிநாட்டு சந்தையை நம்பி இருக்க வேண்டிய தேவை குறையும் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 15-20 சதவீத வளர்ச்சி அடைந்த ஐடி துறையின் தற்போதைய வளர்ச்சி ஒற்றை இலக்கத்தில் இருக்கிறது. அரசாங்கம் செலவு செய்யும் பட்சத்தில் ஐடி துறையின் வளர்ச்சி உயரும். மேலும், ஊழல் மற்றும் வெளிப்படைத் தன்மையை உருவாக்க வேண்டும் என்றால் அரசு துறைகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டும். தவிர இதன் மூலம் அரசாங்கத்துக்கு வருமானமும் உருவாகும், தவிர வேலைவாய்ப்பும் உருவாக்கப்படும். இதற்கென புதிதாக தொழில்நுட்ப கொள்கை உருவாக்க வேண்டும். தவிர நாட்டுக்கு தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவியும் உருவாக்கப்பட வேண்டும் என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 mins ago

ஜோதிடம்

23 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்